districts

img

‘எனது குப்பை எனது பொறுப்பு’ ஊருக்குத்தான் உபதேசமா?

நாகர்கோவில், அக்.17- தூய்மை பாரதம் என தொடங்கி கோடிக்கணக்கில் மக்கள் பணம் வீணடிக்கப்பட்டதன் மிச்சம். நாடு  முழுவதும் தேசத்தந்தை காந்தி யின் கண்ணாடியுடனும் மோடி யின் படத்துடனும் சுவர்களில் மின் னியதை பார்த்தோம். தோல்வி அடைந்த இத்திட்டத்தால் குவிந்து கிடக்கும் குப்பை மலைகளுக்கு மக்களே பொறுப்பு என்பதுபோல் இப்போது ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என பெரும் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  மக்க ளும் முடிந்தவரை குளியலறை தண்  ணீர்கூட வெளியே செல்லாத அள வுக்கு எச்சரிக்கையுடன் செயல் பட்டு வருகிறார்கள். கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பேரூராட்சியில் வசிக்கும் மக்களின் கேள்வி இதுதான். ஊருக்குதான் உபதேசமா?  மற்ற  பஞ்சாயத்துகளில் உள்ள குப்பை களை இங்கே கொண்டுவந்து கொட்டுவதா? இதை ஏற்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்து போராட் டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.  ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என கூறி விட்டு வேலியே பயிரை மேய்வது போல் அருகில் உள்ள ஆற்றூர், திரு வட்டார், குலசேகரம் ஆகிய இதர  3 பேரூராட்சிகளின் குப்பைகளை எங்கள் தலையில் கட்டுவதா? என  கேட்கிறார்கள். திற்பரப்பு பேரூ ராட்சியில் உள்ள திருநந்திக் கரை  மக்கள் கடந்த வாரம் இதே கேள்வி யுடன் போராட்டமும் நடத்தினார் கள்.  நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பேரூராட்சிகளின் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் திற்பரப்பு பேரூராட்சி தலைவர்  பொன்.ரவி தலைமையில், தேர்ந்  தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி கள் அனைவரும் அக்டோபர் 17  திங்களன்று உள்ளிருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர்.

நில உரிமை மாற்றம்

அப்போது அவர்கள் கூறுகை யில், திற்பரப்பு பேரூராட்சியில் உள்ள தும்பகோடு –பி கிராமத்தில்  2.9 ஏக்கர் நிலம் எங்கள் பேரூராட்சி யின் பெயரில் திடக்கழிவு மேலா ண்மை திட்டத்துக்கு என மாவட்ட  ஆட்சியரால் ஒதுக்கீடு செய்யப்பட் டது. தற்போது எங்கள் திற்பரப்பு பேரூராட்சி பெயரில் இருந்த உரி மையை ரத்து செய்து உதவி இயக்குநர் பேரூராட்சிகள் பெய ருக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நகல் கிடைத்த பிறகு 30. 9.2022 அன்று நடந்த பேரூராட்சி  மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தில் ரகசியமாக நடந்த நில உரிமை மாற்றத்தை ரத்து  செய்ய வலியுறுத்தப்பட்டதாக தெரி வித்தனர்.   தலைவர் பொன். ரவி கூறுகை யில், எங்கள் பேரூராட்சியில் 25  ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள்  வசிக்கின்றனர். திடக்கழிவு மேலா ண்மை திட்டத்தின் விதிமுறை களின் படி 2.9 ஏக்கர் நிலம் எங்கள் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கையாள மட்டுமே போதுமானது.  அளவுக்கு அதிக மான குப்பைகளை இங்கு குவிப்  பது தொல்லியல் துறையின் கட்டுப்  பாட்டில் உள்ள குகைக்கோயில் வளாகம் உட்பட துர்நாற்றம் வீச வும் அருகில் உள்ள சிவாலய  ஓட்டத்தின் நான்காவது திருத்தல மான நந்தீஸ்வரன் கோவிலுக்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்  தர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த வும் வழிவகுப்பதாகிவிடும்.  இந்த இடத்தை ஒட்டி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. பறவைகள், வன விலங்குகளுக்கும் குப்பைக் கழிவுகளால் பாதிப்பு ஏற்படும்.

சுகாதாரக் கேடு ஏற்படும்

குலசேகரம், ஆற்றூர் பேரூ ராட்சிகளில் மருத்துவக்கல்லூரி கள் உள்ளன. அங்குள்ள மருத்து வக்கழிவுகளும் இங்கு கொண்டு வரப்படும் வாய்ப்புள்ளதால் அரு கில் உள்ள நந்தியாற்றில் அவை  கலந்து சுகாதாரக்கேடு ஏற்படும் என்பதால்தான் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  திடக்கழிவு மேலாண்மை திட்டத் துக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலத்  துக்கு தனியார் நிலங்கள் உள்ள டக்கிய வழியை பயன்படுத்த வேண்டியுள்ளது. அவர்கள் தடை ஏற்படுத்தினால் எங்களாலும் குப் பைகளை நிர்வகிக்க முடியாமல் போய்விடும். மக்களின் எதிர்ப்பை எங்களால் புறக்கணிக்க முடியாது. அதனால்தான் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தார்.

துணை இயக்குநரின் பதில் 

இதுகுறித்து பேரூராட்சிகளின் துணை இயக்குநரிடம்  கேட்ட போது, திட்டத்தை செயல்படுத்திய பிறகு பாதிப்புகள் இருந்தால் பரி சீலிக்கலாம். மருத்துவக் கழிவு களை அந்தந்த பேரூராட்சிகள் தான் வீட்டு குப்பைகளுடன் கலக்கா மல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  திற்பரப்பு அருவிக்கு அருகில் வாகன நிறுத்தத்துக்கு இடம் இல்லை.  அருகில் உள்ள பேரூராட்சியில் உள்ள இடத்தை பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்  துரை செய்யப்பட்டுள்ளது. அது போல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த திற்பரப்பு பேரூராட்சியில் அனுமதிக்க வேண்  டும் என்றார்.     காலை முதல் இந்த போராட்டத்  தில் பேரூராட்சித் தலைவருடன் துணைத் தலைவர் எஸ்.சி.ஸ்டா லின்தாஸ், வார்டு உறுப்பினர்கள் பொன்.செந்தில்குமார், பி.கிருஷ்ண வேணி, பா.ஷீஜா சந்திரன், சா.மல்  லிகா உள்ளிட்ட 18 மக்கள் பிரதி நிதிகளும்  ஈடுபட்டிருந்தனர். அவர்  களிடம் மலை 4 மணிக்கு மேல் துணை இயக்குநர் பேச்சுவார்த்தை  நடத்தினார். அதில் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய மாவட்ட ஆட்சி யருக்கு பரிந்துரை செய்வதாக  எழுத்துப்பூர்வமாக உறுதியளித்  தார். அதன்பேரில் உள்ளிருப்புப் போராட்டம் விலக்கிக்கொள்ளப் பட்டது.
 

;