நத்தம், செப்,13- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது நடுவனூர் கிராமம். இங்குள்ளஅரசு நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் பள்ளிக்குள் பாம்புகள் வருவதாகவும், மழைகாலங்களில் பள்ளி கட்டிடம் ஒழுகு வதாகவும் எனவே பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். குடிநீர் வசதி கேட்டும் அப்பகுதி பொது மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அரசு அதிகா ரிகளிடம் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள், மற்றும் மாணவ, மாணவி கள் நத்தம்-சிறுகுடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்ட னர். தகவலறிந்து வந்த ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் கள் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிக ளிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை யடுத்து மறியல் கைவிடப்பட்டது.