மதுரை,செப்.13- அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்துடன் இணைக்கப்பட்டுச் செய லாற்றி வருகிற தென் மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 18-வது பொது மாநாடு, மதுரையில் செப்டம்பர் 25-26 ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளது. மதுரை சுனில் மைத்ரா இல்லத்தில் செவ்வாயன்று மாலை நடைபெற்ற வரவேற்புக்குழு அமைப்புக் கூட்டத்திற்கு தலைவர் டி. பிரபு தலைமை வகித்தார். சங் கத்தின் பொதுச் செயலாளர் ஜி. ஆனந்த் சிறப்புரையாற்றினார். இதில் மதுரை மக்களவை உறுப்பி னர் சு. வெங்கடேசன் தலைமையில், வெகு ஜன அமைப்புகளின் தலைவர்களை உள்ள டக்கிய வரவேற்புக்குழு அமைக்கப்பட்டுள் ளது. சங்கத்தின் மதுரை மண்டல பொதுச் செயலாளர் டி. பாண்டியராஜன் வரவேற்புக் குழுவின் செயலாளராகவும், எம். செந்தில் நாயகம் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிஐடியு மதுரை மாவட்ட நிர்வாகி இரா.லெனின், மதுரை கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் பொதுச் செய லாளர் என்.பி. ரமேஷ் கண்ணன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கத்தின் துணைத்தலைவர் சந்திரசேகர பாரதி, பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்க மதுரை மண்டலச் செயலாளர் த. கோபால் ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.