மதுரை, அக்.1- மதுரை புறநகர் மாவட்டம் உசிலம் பட்டி வட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் கருமாத்தூர் உள்வட்டம் விக் கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது நரியம்பட்டி கிராமம்.இக்கிராமத்திற்கு உசிலம்பட்டி மெயின் சாலை பிரிவு முதல் நரியம்பட்டி வரை பள்ளி குழந் தைகள், பொதுமக்கள் இரவு நேரங்க ளில் நடந்து செல்லுகிற சாலையில் தெரு விளக்கு அமைத்துத் தர வேண் டும். நரியம்பட்டி சுடுகாட்டுக்கு சாலை மற்றும் தண்ணீர், மின்சார வசதி செய்து தர வேண்டும். அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் மற்றும் குளியல் தொட்டி ஆகியவை தொடர்ந்து செயல்பட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நரியம்பட்டி கட்சி கிளை சார்பில் செப்டம்பர் 30 வெள்ளிக் கிழமையன்று சாலை மறியல் போராட் டம் அறிவிக்கப்பட்டு ஒன்றியம் முழு வதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இந்நிலையில் செப்டம்பர் 29 வியா ழனன்று உசிலம்பட்டி வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடை பெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்லம்பட்டி ஒன்றிய செயலா ளர் வி.பி.முருகன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.எஸ்.முத்துப்பாண்டி மற் றும் நரியம்பட்டி கட்சி கிளை தோழர் கள், கிராம பெதுமக்கள் மற்றும் செல் லம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) விக்கிர மங்கலம் ஊராட்சி செயலாளர் மற்றும் விக்கிரமங்கலம் காவல்துறை ஆய்வா ளர், சுகாதார அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த பேச்சுவார்த்தையில் உசி லம்பட்டி மெயின் சாலை பிரிவு முதல் நரியம்பட்டி வரை 15 தினங்களுக்குள் தெரு விளக்கு மற்றும் 30 தினங்க ளுக்குள் சுடுகாட்டுக்கு சாலை, தண் ணீர் மற்றும் மின்சார வசதியும், சுகா தார நிலையம் மற்றும் குளியல் தொட்டி இவைகளை உடனடியாக செயல் பாட்டுக்கு கொண்டு வந்து தொடர்ந்து செயல்பட ஏற்பாடு செய்யப்படும் என் றும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதன்பின்னர் வெள்ளியன்று நடக்க விருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது.