districts

img

காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு அலுவலக காப்பாளர்  தோழர் ஏ.முருகேசன் டிசம்பர்  28 அன்று காலமானார். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் டிசம்பர் 31 சனிக்கிழமையன்று தோழர் முருகேசன் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்  கூறினார் .மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், தீக்கதிர் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி,  பகுதிக்குழு  செயலாளர் வி. கோட்டைச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  மாநில செயற்குழு உறுப்பினரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன்  வெள்ளியன்று தோழர் முருகேசன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.