திண்டுக்கல், டிச.18- சிறுபான்மை மக்கள் மீது மதவெறி அமைப்பினர் தொடர் தாக்குதல் நடத்துவதைக் கண் டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் திண்டுக்கல் மற்றும் பழனியில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. உலக சிறுபான்மை தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சனிக்கிழமையன்று நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் கே. பாலபாரதி பேசினார். மாவட்டச் செயலாளர் வ. கல்யாணசுந்தரம், மாவட்டத் தலைவர் அரபுமுகமது, துணைத் தலைவர்கள் ஸ்டாலின், சம்சு தீன், முகமது மைதீன், முருகன், ஜமால்முகமது, நகர பொறுப் பாளர் அமானுல்லாகான், கிருஷ்ணன், அடியனூத்து ஊரா ட்சித் தலைவர் ஜீவானந்தம், ஒன்றியக் கவுன்சிலர் ஜீவானந் தினி, சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் சரத்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பழனியில் பைபாஸ் ரவுண் டானாவில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு நகர அமைப்பாளர் ஆரிஸ் பாபு தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் குரு சாமி, மாவட்டக்குழு உறுப்பி னர்கள் சவுகத்அலி, செரிப் ஆகி யோர் பங்கேற்றனர்.