districts

img

பனைமரம் வளர்ப்பதில் சிவகங்கை முதன்மை பெற செயல்படுவோம்

சிவகங்கை, டிச.11-  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கோட்டைஇருப்பு கிராமத்தில் பனை விதை நடும் விழா மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது.  அப்போது அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் 12 லட்சத்து 2 ஆயிரத்து 150 பனை விதைகள் விதைக்கப்பட்டு வளர்க்கும் பொறுப்பை ஏற்று உள்ளோம்.  ஏரி, குளங்களின் கரைகளை பலப்படுத்தும் பனைமரம் விவ சாயிகளின் நண்பன் ஆகும். இவற்றைக் கவனத்தில் கொண்டு சிவ கங்கை மாவட்ட இளைஞர்கள் பனை மரம் வளர்ப்பதில் அக்கறை யோடு செயல்பட்டு உலக சாதனையில் சிவகங்கை மாவட்டம் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.   விழாவில் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சண்முகவடிவேல், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தென்னரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜஹாங்கீர் மாவட்ட திட்ட அலுவலர் சிவராமன், ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா முரு கேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

;