நத்தம், பிப்.16- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி பகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் 18 வார்டுகளில் போட்டி யிடும் வேட்பாளர்களை ஆதரித்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வாக்குகள் சேகரித்தார். நத்தம் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடை பெற்ற நிகழ்வில், 11-வது வார்டில் போட்டியிடும் திமுக சேர்மன் வேட்பாளர் சேக் சிக்கந்தர் பாட்சா, 16-ஆவது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் விஜயவீரன் உள்பட திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசி னார். இதில், முன்னாள் எம்.எல்.ஏ ஆண்டிஅம்பலம், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன், ஒன்றிய செயலா ளர் ரத்தினக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், நகர் செயலாளர் முத்துகுமார்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பதுருஸ்ஸமான், சிபிஎம் தாலுகா செயலாளர் சின்னக்கருப்பன், மாவட்ட குழு ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.