districts

img

ஆவின் பால்- பால் பொருட்களை ரேசன் கடைகளில் மானிய விலையில் வழங்கிடுக!

நாமக்கல், டிச.19-   ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை ரேசன்  கடைகளில் மானிய விலையில் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பால் உற்பத்தியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் டிசம்பர் 19 காலை  மாநிலத் தலை வர் ஏ.எம்.முனுசாமி தலைமையில் நாமக்கல்லில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் கே.முக மது அலி,  மாநில பொருளாளர் எம்.சங்கர் மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.   இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  ஆவின் கலப்பு தீவனம், பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, தவிடு உள்ளிட்ட அனைத்து பொருட் களின் விலை பல மடங்கு உயர்ந்துள் ளது. இச்சூழலை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு பால் கொள்முதல் விலையை ஒரு லிட்ட ருக்கு ரூ. 10 வீதம் உயர்த்தி பசும்பாலு க்கு ரூ. 42 ம் ,எருமைப் பாலுக்கு ரூ.52 ம் அறிவித்திட வேண்டும்.  

பால் உற்பத்தியாளர்களுக்கு பண பாக்கி ரூ.400 கோடியை உட னடியாக வழங்க வேண்டும்.  ஆவின் பால் பொருட்கள் விற்பனையை விரிவுபடுத்த வேண்டும். கால்நடை தீவனங்கள் தரமானதாகவும் 50 சத வீதம் மானிய விலையில் வழங்க வேண்டும்  கடந்த ஆட்சியில் மாவட்ட ஒன்றி யங்களை பிரித்த பொழுது புதிய ஆட்கள் நியமனம் செய்ததில் ஊழல்  புரிந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் நிர்வாக த்தில் நடைபெறும் ஊழல் ஊதாரி தனங்களை களைய வேண்டும். ஆவின் நிர்வாக முறைகேடுகளை சரி செய்ய வேண்டும். நிர்வாகச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

ஆரம்ப சங்கங்களில் பால் கொள்முதல் செய்யும் போது பாலின் அளவையும், தரத்தையும் உற்பத்தியாளர்களுக்கு குறித்து கொடுக்க வேண்டும் என்ற  உயர்நீதி மன்ற மதுரை கிளையின் தீர்ப்பை அமலாக்க வேண்டும்  சென்னை கோட்டை  முன்பு போராட்டம் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை ரேசன் கடைகளில் மானிய விலையில் வழங்க நட வடிக்கை எடுக்க வேண்டும் . குழந்தைகள் சத்துணவு திட்டத்தில் ஆவின் பாலையும்  இணைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை  தமிழ்நாடு அரசு உடனடியாக அமல் படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் பிப்ரவரி மாதத்தில் சென்னை கோட்டை முன்பு (தலை மைச்செயலகத்தில்) பால் உற்பத்தி யாளர்களின் ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.

;