திண்டுக்கல், மார்ச் 20- தோழர் மல்லு சுவராஜ்ஜி யத்தின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு திண்டுக்கல்லில் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத் தில் கடைப்பிடிக்கப்பட்டது. அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பாக நடைபெற்ற அஞ்சலி நிகழ் வில் மாநிலத் தலைவர் வாலண்டினா, மாநிலச்செய லாளர் ஜி.ராணி, மாவட்டச் செயலாளர் வே.பாப்பாத்தி, மாவட்ட நிர்வாகிகள் ஆர். வனஜா, எஸ்.எம்.பழனியம் மாள், தங்கமணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்க மாவட் டச் செயலாளர் கவிவாணன், நகர்த் தலைவர் வைத்திய லிங்க பூபதி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் இலமு உள்ளிட்ட பலர் தோழர் மல்லு சுவராஜ்ஜியத் தின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். தோழர் மல்லு ஸ்வ ராஜ்ஜியம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள நல கொண்டா மாவட்டத்தில் சூர்யாபேட்டில் பிறந்தார். வெள்ளையர் ஆட்சியின் போது காந்தியின் வேண்டுகோ ளுக்கிணங்க சத்தியாகிரக போராட்டங்களில் பங்கெ டுத்தார். தமது 10-ஆவது வய தில் மார்க்சிம் கார்க்கி எழு திய தாய் நாவலைப் படித்து ஒரு கம்யூனிஸ்ட்டாக மாறி னார். நிஜாம் மன்னரின் ஆட் சிக்கு எதிராக நடைபெற்ற தெலுங்கானா புரட்சியில் பெண்கள் படைத்தளபதி யாக துப்பாக்கி ஏந்தி போரா டிய போராளி மல்லு சுவ ராஜ்ஜியம் என்பது குறிப்பி டத்தக்கது.