districts

மதுரை விரைவு செய்திகள்

ஆயுள் தண்டனை

தென்காசி, டிச. 3- செங்கோட்டையில் முன்விரோதம் காரணமாக ராணுவ வீரரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  தென்காசி மாவட்டம்,  செங்கோட்டை காலாங்கரையைச்  சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் விஜிமோன் என்பவரின் தங்க சங்கிலி தொலைந்தது சம்பந்தமாக செங்கோட்டை போலீசார் காலாங்கரை மின்வாரிய அலுவலகம் அருகே வசித்து வந்த பரமசிவம் என்பவரை விசாரணை செய்தனர். இது சம்பந்தமாக ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கடந்த 11.05.2015  அன்று பரமசிவம்  மகன் பண்டாரம் (27)  முன்னாள் ராணுவ வீரர் விஜிமோனை  கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.  இது குறித்து செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் முனீஸ்வரன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு பண்டாரத்தை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த வழக்கு விசாரணை தென்காசி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா குற்றவாளிக்கு  ஆயுள் தண்டனையும்,  ரூபாய் 4000  அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

10 நாட்களுக்கு மேலாக எரியாமல் இருக்கும் தெருவிளக்குகள்

தூததுக்குடி, டிச. 3 இது தொடர்பாக   வாலிபர் சங்க  தூத்துக்குடி ஆறுமுகநேரி கிளைத் தலை வர் குமரன் விடுத்துள்ள அறிக்கையில், ஆறுமுகநேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 18ஆவது வார்டு பகுதியில் பெரும்பாலும்  ஏழை, விவசாய, தாழ்த்தப்பட்ட மக்கள்  வசித்து வருகின்றனர். இந்த வார்டு பகுதி யில் இருக்கும் செல்வராஜபுரம் தெருவில் உள்ள தெரு விளக்குகளில் சுமார் 30க்கும்  மேற்பட்ட தெருவிளக்குகள் 10 நாட்களு க்கும்  மேலாக எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இரவு ஏழு மணிக்கு மேல் பெண்கள், குழந்தைகள் நடமாடவே அச்சப்படுகின்றனர். இதனால் அப்பகு தியில் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படுவ தற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது. ஆகவே இப்பகுதி மக்களின் நலன் கருதி உடனடியாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம்) 18-ஆவது வார்டு கிளை சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

சமையல் சிலிண்டருக்கு கூடுதல் தொகை செலுத்த தேவையில்லை: ஆட்சியர்

தூததுக்குடி, டிச. 3 தூத்துக்குடி மாவட்டத்தில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பணம் செலுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட செய்தி யில், தூத்துக்குடி மாவட்டத்தில் 01.12.2021 முதல் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ.964/- ஆகவும், கோவில்பட்டியில் ரூ.962.50./- ஆகவும், கழுகுமலையில் ரூ.971/- ஆகவும், கயத்தாரில் ரூ.974/- ஆகவும், எட்டை யபுரத்தில் ரூ.962.50/- ஆகவும் மற்றும் சாத்தான்குளம் பகுதிக்கு ரூ.981/- எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திற்கு  ரூ.964./ எனவும், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை ரூ.964/- எனவும்  எரிவாயு நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. எனவே நுகர்வோர்கள் எரிவாயு முகவர்களிடமிருந்து வாங்கும் வீட்டு உப யோக எரிவாயு உருளைக்கு(14.2kg) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தென்காசி விவசாயிகளிடம் இருந்து  கேரளத்திற்கு காய்கறிகளை கொள்முதல் செய்ய முடிவு

தென்காசி, டிச. 3- தென்காசியில் இருந்து கேரள மாநிலத்திற்கு காய்கறிகளை மொத்தமாக விவசாயிகளிடம் இருந்து வேளாண் துறை மூலம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  தென்காசியில் உள்ள வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில்  கேரள மாநில வேளாண் அதிகாரிகள், தென்காசி மாவட்ட வேளாண் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் தென்காசி பகுதி வேளாண் அலுவலர் சிவ ராமகிருஷ்ணன், கேரள மாநில வேளாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் காய்கறி உற்பத்தி மற்றும் விற்பனை மைய நிர்வாக இயக்கு னர் ஜே.சஜீவ் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழகத்திலி ருந்து கேரள மாநிலத்திற்கு காய்க றிகளை மொத்தமாக விவசாயிக ளிடம் இருந்து வேளாண் துறை மூலம் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விற்பனை செய்ய ஆலோசனை நடைபெற்ற தாக தெரிகிறது.

காய்கறி உற்பத்தி மற்றும் விற்பனை அங்காடி மூலம் கேரள மாநில மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் வழங்கும் வண்ணம்  அந்த மாநில அரசு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதல்கட்ட முயற்சியாக இடைத்தரகர்களை தவிர்த்து விவசாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகள் கொள்முதல் செய்வதற்கான முயற்சியாக இந்த கூட்டம் நடந்த தாக கூறப்படுகிறது. தமிழகத்தில் தென்காசி மாவட்டத்திலுள்ள தோட்டக் கலைத்துறை சார்பில் ஏற்படுத்தப் பட்டுள்ள 6 உழவர் குழுக்களில் அங்கம் வகிக்கும் 6 ஆயிரம் விவ சாயிகளிடம் இருந்து நேரடியாக காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு தென்காசி தினசரி சந்தை விலையை அடிப்படை யாகக் கொண்டு விவசாய சங்கங்களுக்கு எவ்வளவு கமிஷன் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படு கிறது. தென்காசி மாவட்டத்திலி ருந்து முதற்கட்டமாக ஆலப்புழா, பத்தனம்திட்டா மற்றும் கொல்லம் மாவட்டங்களுக்கு காய்கறிகள் வினியோகிக்கப்படும் என்றும், மற்ற தென் மாநிலங்களிலும் காய்கறி கொள்முதல் செய்வது குறித்து விரைவில் முடிவு எடுக் கப்படும் எனவும் வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் சாவு

தூததுக்குடி, டிச. 3 தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது:  தூத்துக்குடி அண்ணா நகர் 10ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் முரளி (15), தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தான். வியாழனன்று ஸ்டேட் பாங்க் காலனியில் உள்ள தனது நண்பரான அஜித் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வீட்டில் தேங்கிய மழைநீரை மின் மோட்டார் மூலம் வெளி யேற்ற முயன்றுள்ளனர். அப்போது  மின் மோட்டார் சுவிட்சை போட்டபோது எதிர்பாராதவிதமாக உடலில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் முரளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தான்.  இதுகுறித்து வடபாகம் காவல் ஆய்வாளர் முருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

 

 

;