நாடாளுமன்றத்தில் கே.நவாஸ்கனி எம்.பி., பேச்சு புதுதில்லி, டிச.8- ஆன்லைன் சூதாட் டத்தை நாடு முழுவதும் தடை செய்ய வேண் டும். தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை நிறைவேற் றிய தீர்மானங்களை கிடப்பில் போட்டு ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவமதிக்கிறார் என்று நாடாளுமன்றத்தில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி பேசினார். நாடாளுமன்ற மக்களவையில் டிசம்பர் 8 வியாழனன்று கே. நவாஸ்கனி பேசிய தாவது: ஆன்லைன் சூதாட்டத்தினால் பலரும் தற்கொலை செய்து கொண்டிருக்கும் நிலை யில் அதனை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆன்லைன் சூதாட் டத்தை தடை செய்வதற்கு மக்கள் பிரதிநிதி கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருந் தும், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்காத தால் இன்னும் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை உயிரிழப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகள் பெரும்பான்மையாக ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் ஒப்பு தல் அளிக்காமல் கிடப்பில் போட்டிருக்கி றார். இதனால் உயிர் இழப்புகள் அதிக ரித்துக் கொண்டிருக்கிறது. எந்த விதத்திலும் மக்களால் தேர்ந்தெ டுக்கப்படாத ஆளுநர் இந்த மசோதாவை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். இந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட கிட்டத்தட்ட 22 மசோதாக் களுக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட சபையில் நிறைவேற்றப்பட்ட மசோ தாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கா தது தமிழக சட்டசபையை மட்டுமல்ல, எட்டு கோடி தமிழர்களையும் அவமதிக்கக் கூடிய செயல்.ஒன்றிய அரசின் பிரதிநிதியாக இருக்கக்கூடிய ஆளுநரை ஒன்றிய அரசு வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.