districts

மதுரை முக்கிய செய்திகள்

காய்கறிகள் விலை அதிகரிப்பு

மதுரை, செப்.6-  மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள சென்ட்ரல் மார்க்கெட்டில் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. தொடர் மழையால் காய்கறி வரத்து குறைவு மற்றும் ஓணம்  பண்டிகை, விசேஷங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.  கடந்த வாரம் கிலோ 10 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை  விற்கப்பட்டது. தற்போது 15 கிலோ அடங்கிய தக்காளி  பெட்டி ரூ. 400 முதல் ரூ. 600 வரையும் சில்லரை விலையில் ஒரு கிலோ தக்காளி 40 ரூபாய் முதல் 60 வரையும் விற்ப னையாகி வருகிறது.  சின்ன வெங்காயம் கிலோ 30 ரூபாய் முதல் 50 ரூபாய்  வரையும், சண்டா(ஒட்டு) 40 ரூபாய் முதல் 60 ரூபாய் வரையும், பெரிய வெங்காயம் கிலோ 17 ரூபாய் முதல்  30 ரூபாய் வரையும் விற்கப்படுகிறது. இதர காய்கறிகள்  விலை கிலோவில் முருங்கைக்காய் ரூ 100, சுரைக்காய்  ரூ 15 முதல் 20, கருவேப்பிலை ரூ 20 முதல் 30, புட லங்காய் ரூ. 30, பாகற்காய் பெரியது ரூ 30 முதல் 50, புதினா ஒரு கட்டு ரூ 25, மல்லி ரூ 60, பழைய இஞ்சி ரூ.80, புது இஞ்சி ரூ 30, மிளகாய் உருட்டு ரூ 40 முதல்  50, மிளகாய் சம்பா ரூ 40 முதல் 50, கத்தரிகாய் ரூ 50,  கம்மா கத்தரி ரூ 60, வெண்டைக்காய் ரூ. 50, சீனியா வரக்காய் ரூ 50, மாங்காய் நாடு ரூ 90, மாங்காய் கல்லாமை  ரூ 120, முருங்கை பீன்ஸ் ரூ 70 முதல் 100, நைஸ் அவரை  ரூ 40, பெல்ட் அவரை ரூ. 40, பட்டை அவரை ரூ 60,  பீர்க்கங்காய் ரூ 40 முதல் 50 என்றும் தொடர்ந்து இந்த  வாரம் முழுவதும் காய்கறிகள் விலை அதிகரித்து காணப்படும் என்றும் மார்க்கெட் மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

எட்டிவயல் கிராமத்தில் வணிக  கடைகளை முதல்வர் திறந்துவைத்தார்

இராமநாதபுரம், செப்.6- வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணி கத்துறை சார்பில் இராமநாதபுரம் மாவட்டம், எட்டிவயல் கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளா கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 65 வணிக கடைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 6 அன்று காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி  டாம் வர்கீஸ் பார்வையிட்டு தெரிவிக்கையில், இந்த வணிக வளாகத்தில் வணிக கடைகள் மூலம் மாவட்டத்தில் உள்ள  அனைத்து விவசாயிகளுக்கும் குறிப்பாக குண்டு மிள காய் விவசாயிகளுக்கும் மற்றும் வியாபாரிகளுக்கும் பெரிய அளவில் பயனுள்ளதாக அமையும். ஏற்கனவே  இவ்வளாகத்தில் 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட  மிளகாய் குளிப்பதன் கிட்டங்கி செயல்பட்டுவருகிறது. மிளகாய் குளிப்பதன் கிட்டங்கி மற்றும் புதிதாக கட்டப்  பட்டுள்ள திறக்கப்பட்டுள்ள வணிக வளாகக் கடைகள்  ஆகிய இரண்டும் இராமநாதபுரம் மாவட்ட விவசாயி களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் படிப்  படியாக இவ்வளாகத்தில் கூடுதல் வணிக வளாகக் கடை கள் மற்றும் குளிர்சாதன கிட்டங்கிகள் விரிவாக்கப்படும்.வைகை அணையில் இருந்து இராமநாதபுரம் மாவட் டத்திற்கு வரும் உபரி நீர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதி களில் உள்ள கண்மாய்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, வேளாண் விற்பனை- வேளாண் வணிகத்துறை செயலாளர் ராஜா,  போகலூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சத்தியகுண சேகரன், பரமக்குடி வட்டாட்சியர் தமீம் அன்சாரி , எட்டி வயல் ஊராட்சி மன்றத் தலைவர் கனகசக்தி பாஸ்கரன்  மற்றும் இராமநாதபுரம் மிளகாய் வத்தல் வணிகர் சங்கப்  பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஓணம் பண்டிகை எதிரொலி  எல்லைப்பகுதியில்  கேரள -தமிழக   போலீசார் இணைந்து சோதனை

தேனி, செப்.6- ஓணம் பண்டிகையை முன்னிட்டு சட்டத்துக்கு புறம்  பாக இருமாநில எல்லைப்பகுதி வழியாக  போதைப் பொருள் கடத்தலை தடுக்க எல்லைப்பகுதியில் இரு மாநில போலீசார் இணைந்து சோதனை நடத்தினர்.  இதன் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை தமிழக  கேரள எல்லையான குமுளி சோதனைச் சாவடி,  ரோசாப்  பூ கண்டம், பாண்டிக்குழி உள்ளிட்ட பகுதிகளில் கேரள  தமிழ்நாடு கலால், காவல்துறை மற்றும் மதுவிலக்கு அம லாக்கப் பிரிவு போலீசார்  இணைந்து வாகனத் தணிக்கை யில் ஈடுபட்டனர். இடுக்கி கலால் துணை ஆணையர் சலீம் உத்தரவின்  பேரில், நடைபெற்ற இந்த சோதனையில், கேரள கலால்  துறை  ஆய்வாளர்கள்  ராஜேஷ், ஜார்ஜ் ஜோசப், சுரேஷ்,  தமிழ்நாடு சார்பாக சார்பு ஆய்வாளர்கள்  அழகுராஜா, அன்பழகன் தலைமையில் போலீசார்  20க்கும் மேற்  பட்டோர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். போதைப் பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக  இந்த சோதனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றும் வரும் நாட்களில் சோதனைகள் தொடரும் என்றும் அதி காரிகள் தெரிவித்தனர்.

ஓபிஎஸ் ஆதரவாளரின் ஓட்டுநர்  ரூ.50 லட்சம் அபேஸ் விவகாரத்தில்  மேலும் இருவர் கைது 

தேனி, செப்.6- முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவா ளரின் ஓட்டுனர் ரூ 50 லட்சத்துடன் தலைமறைவாகி கைதான விவகாரத்தில் மேலும் இருவரை காவல்துறை யினர் கைது செய்துள்ளனர்.  பெரியகுளத்தில் முன்னாள் முதல்வர் ஓ .பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர்  நாராயணனின் கார் ஓட்டு நர் ஸ்ரீதரன் என்பவர் ரூ.50 லட்சத்துடன் மாயமானார்.இத னைத் தொடர்ந்து பெரியகுளம் காவல் நிலையத்தில் நாரா யணன் புகார் அளித்தார். மேலும் ஸ்ரீதரனின் மனைவி கங்கம்  மாளும் தனது கணவரை காணவில்லை என்று பெரிய குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.தனிப்படை அமைத்து கார் ஓட்டுநர் ஸ்ரீதரனை கைது செய்தனர். காவல்  துறையினர் நடத்திய விசாரணையில்  ரூ.50 லட்சம் பணத்து டன் பெரியகுளம் நோக்கி வந்த ஸ்ரீதரன் செல்போனில் தக வல் தெரிவித்து காங்கிரஸ் பிரமுகர் ஸ்ரீதர்  மற்றும் பாலகிருஷ்ண னிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து விட்டு அங்கி ருந்து சென்று விட்டதும், பின்னர் தன்னிடம் இருந்த மீதி  தொகையை வேறு சிலரிடம் கொடுத்து வைப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றதும் தெரியவந்தது. 

சூலக்கரை அருகே  வீடு புகுந்து திருட்டு

விருதுநகர், செப்.6- விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையில் பூட்டி யிருந்த வீட்டின் உள்ளே புகுந்து வெள்ளிப் பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்ற னர். சூலக்கரை அருகே உள்ள பாலன் நகரைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்(66). இவர் தனது வீட்டைப் பூட்டி விட்டு சென்னைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. இத னால், அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்த  போது, பீரோவில் இருந்து கைக்டிகாரம், கேமரா,  எல்.இ.டி டிவி, வெள்ளிக் கொலுசு மற்றும் விளக்கு களை காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ், சூலக்கரை காவல் நிலையத்தில் புகார்  செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து  மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

மயானத்தில்  பொது கழிப்பிடம் கட்ட எதிர்ப்பு  தேனி அருகே சாலை மறியல் 

தேனி, செப்.6- தேனியில் மயானத்தில் பொதுக் கழிப்பிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்  டத்தில் ஈடுபட்டனர். தேனி நகராட்சி  வார்டு எண் 1,2,3,4 ஆகிய பகுதிகளுக்கு பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான  மயான பகுதியில் ரூ 23 லட்சம் மதிப்பீட்டில்  சுகாதார வளாகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பகுதியை சேர்ந்த முதியவர் ஒரு வர் இறந்து விடவே ,அந்த மயானத்தில் அடக்கம் செய்ய  ஏற்பாடு செய்யப்பட்டது .அப்போது மயானத்திற்கு வந்த வர்கள் மயானத்தில் சுகாதார வளாகம்  கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர் .பின்னர் தேனி-அல்லிநக ரம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அதனைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர், நகர்  மன்ற துணை தலைவர் நகராட்சி ஆணையர்  ,காவல்துறை யினர் ஆகியோர் கிராம மக்களுடன் பேச்சுவார்தையில் ஈடு பட்டனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் மயானத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட மாட்டாது என உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர் .  தேனி-அல்லி நகரம் சாலையில் மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அங்கன்வாடி ஊழியரிடம்  நகை பறித்தவர்  கைது

மதுரை, செப்.6- மதுரை புது விளாங்குடி, ராமமூர்த்தி நகரை சேர்ந்த  சங்கர்குமார் மனைவி மாலதி (வயது 33). பழைய விளாங்குடி அங்கன்வாடி மைய ஊழியர். திங்களன்று மதியம் இவர் அங்கன்வாடி மையத்தில் பணியில் இருந்த போது அங்கு வந்த வாலிபர், மாலதி அணிந்திருந்த நகை யை பறித்து தப்பி ஓடினார்.   அப்போது ரோந்துபணியில் இருந்த கூடல்புதூர் காவல்துறை ஆய்வாளர்  சுந்தரி தலைமையில் காவல் துறையினர் வாலிபரை மடக்கிப் பிடித்தனர். காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் புதுக்கோட்டை மாவட்டம், பொன்ன மராவதி, பெரி யார் நகரை சேர்ந்த பாலமுருகன் (வயது 30) என்பது  தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

வைகை ஆற்றில் குளிக்கத் தடை

மதுரை, செப்.6- தேனி மற்றும் கேரள பகுதிகளில் பெய்துவரும் மழையால்   வைகை அணைக்கு நீர் வரத்து அதிக ரித்துள்ளது. எனவே வையாற்றில் இருந்து கடந்த  10 தினங்களாக வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது தொடர்ந்து மதுரை மாவட்ட நிர்வா கம் சார்பில் பொதுமக்கள் ஆற்றுக்குள் செல்வதற்கும் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் செவ்வாயன்று வைகை யாற்றில் இருந்து 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை மாவட்ட ஆட்சி யர் மரு எஸ். அனிஷ் சேகர் மதுரை வைகையாற்று கரையோரம் உள்ள பொதுமக்கள் கூடுதல் கவனத்துட னும்,  பாதுகாப்புடனும், வைகை ஆற்றில் இறங்கு வதை முற்றிலும் தவிர்த்திடவும், ஆடு மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வைகை ஆற்றில் இறங்கா மல் பாதுகாத்திட வேண்டும் என்று தெரிலித்துள்ளார்.

மதுரையில் வெள்ளப்பெருக்கு எதிரொலி வைகை அணையில் உபரிநீர் திறப்பு நிறுத்தம்

தேனி, செப்.6- மதுரை வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு காரணமாக வைகை அணையில் உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும்  தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்  மழையினால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை 70 அடியாக உயர்ந்தது. இதன்காரணமாக கடந்த 2 வாரங்களுக்கு  மேலாக வைகை அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில் கடந்த இரண்டு நாட்களாக தேனி மாவட்டத்தில் பெய்த மழையினால் வராக நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, சோத்  துப்பாறை, மஞ்சளாறு அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மற்றும்  வைகை அணையில் இருந்து திறக்கப்படும்  தண்ணீர் என பல நதிகளில் இருந்து வந்த தண்ணீர் வைகை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக மதுரையில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்  பட்டது. வினாடிக்கு 15ஆயிரம் கன அடி வரையில் வைகை ஆற்றில் தண்ணீர் சென்  றது.  தண்ணீர் திறப்பு நிறுத்தம்  இதனையடுத்து வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் விதமாக வைகை  அணை யில் இருந்து உபரிநீர் திறப்பது செவ் வாய்க்கிழமை மதியம் திடீரென நிறுத்தப் பட்டது. வைகை அணையில் இருந்து வினா டிக்கு 3700 கனஅடி  திறக்கப்பட்ட தண்ணீர்  அடியோடு நிறுத்தப்பட்டது. மேலும் வைகை அணையின் நீர்மட்டத்தை 71 அடி வரையில் உயர்த்த பொதுப்பணித்துறை யினர் முடிவு செய்துள்ளனர். அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டும் பட்சத்தில் உபரி நீரை அதிகமாக ஆற்றில் திறக்காமல் பாச னக்கால்வாய் வழியாக திறக்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. மேலும் அணையில் இருந்து குடிநீருக்காக 69 கன அடி தண்ணீர் மட்டும் வெளியேற்றப்பட்டு வருகிறது. வைகை அணை நீர்மட்டம் எந்த நேரத்திலும் 71 அடியை எட்டும் என்பதால் வைகை  அணைக்கு வரும் நீர்வரத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்கா ணித்து வருகின்றனர்.

 

;