districts

img

கொட்டாம்பட்டியில் சுகாதார திருவிழா

மதுரை, மே 4- மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியில்  சுகாதார திருவிழா மற்றும் கலைஞரின் வரு முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் புதனன்று  கொட்டாம்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.  இந்த முகாமிற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்  தலைமை யேற்று துவக்கி வைத்தார். மதுரை மாவட்ட துணை இயக்குநர் மருத்துவர். செந்தில்  குமார் , மேலூர் வட்டாட்சியர் இளமாறன், கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்   செல்லப்பாண்டியன், வட்டார வளர்ச்சி அலு வலர் (கிராம ஊராட்சிகள்) ராமமூர்த்தி மற்  றும் கொட்டாம்பட்டி ஊராட்சி மன்ற தலை வர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் கருங்காலகுடி வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சண்முக பெருமாள் தலைமையிலான  மருத்துவ குழு வினரும்  மதுரை அரசு இராஜாஜி மருத்துவ மனை சிறப்பு மருத்துவ குழுவினர்களும் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து தேவையான ஆலோசனைகளையும், சிகிச்சையினையும் வழங்கினர். முகாமில் 1000 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள். குறிப்பாக இந்த மருத்துவ முகாமில் புதிதாக இரு தய  எக்கோ பரிசோதனை நோயாளி களுக்கு செய்யப்பட்டு தகுந்த ஆலோசனை கள் வழங்கப்பட்டது. கர்ப்பிணி தாய்மார் களுக்கு ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்பட்டது.. இந்த முகாமில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன்,  மேலூர் தாலுகா செயலாளர் எம்.கண்ணன் மற்றும்  தாலுகா குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.