திருவில்லிபுத்தூர்,ஏப்.12- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலில் சுற்றுலாத்துறையின் சார்பாக சுற்றுலா வழிகாட்டி உதவியுடன் கூடிய சுற்றுலாவினை (GUIDED TOUR) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெய சீலன் ஏப்ரல் 12 அன்று துவக்கி வைத்தார். இச்சுற்றுலாவில் சுற்றுலா பயணிகளுக்கு ஆண்டாள் கோவிலின் தலவரலாறு மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து சுற்றுலா வழிகாட்டியின் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. இதில்; 10 பேர் கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி என்ற நடைமுறையில் நடத்தப்படு கிறது. மேலும் இச்சுற்றுலாவிற்கான கட்டண தொகையாக ஒரு சுற்றுலா பயணிக்கு ரூ.100- வீதம் வசூலிக்கப்படு கிறது. இதன் மூலம் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநில ங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பயனடை வார்கள். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா அலுவலர் ந.அன்பரசு மற்றும் செயல் அலுவலர், நாச்சியார் (ஆண்டாள்) கோயில் மற்றும் சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.