districts

img

வேலையின்மை, பணவீக்கத்தை கட்டுப்படுத்த தெரியாமல் பிரதமரும் நிதியமைச்சரும் தடுமாறுகிறார்கள்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சாடல் திண்டுக்கல், செப்.7- நாட்டில் வேலையின்மை மற்றும் பண வீக்கத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று  தெரியாமல் பிரதமர் மோடியும், நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமனும் தடுமா றிக்கொண்டிருப்பதாக என்று முன்னாள் நிதியமைச்சரும், மூத்த காங்கிரஸ் கட்சி யின் தலைவருமான ப.சிதம்பரம் சாடி யுள்ளார்.  திண்டுக்கல்லில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்டத்தலைவர் வரதராஜன் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறு கையில்,  மத வேறுபாடு, சாதி வேறுபாடு.  மொழி வேறுபாடு, வடநாடு தென்னாடு என்ற  வேறுபாடுகளைத்தான் மத்தியில் ஆளும்  ஒன்றிய பாஜகவினர் வளர்த்துக்கொண்டி ருக்கிறார்கள். இந்த நேரத்தில் மக்களை  ஒன்றுபடுத்துவதற்காக, நாம் எல்லாம் ஒரு  தாய் பிள்ளைகள் என்ற உணர்வை வளர்ப்ப தற்காகத்தான் ராகுல்காந்தி தலைமை யிலே காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை தொடங்கியிருக்கிறது. ஒன்றிய ஆட்சியா ளர்கள் பொருளாதாரத்தைப் பற்றி அறியாத வர்களாக உள்ளனர். தொடர்ந்து தவ றான பொருளாதாரக் கொள்கைகளை பின்  பற்றினால் இலங்கையைப் போல பலவீன மடையும். வேலையின்மை, பணவீக்கம் இரண்டும் நாட்டில் உயர உயர பறக்கிறது. இந்த கொடியைத்தான் பிரமரும், ஒன்றிய நிதி அமைச்சரும் அண்ணாந்து பார்த்துக்  கொண்டிருக்கிறார்கள். பண வீக்கத்தை யும், வேலையின்மையையும் எப்படி கட்டுப்  படுத்துவது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.  பேட்டியின் போது திண்டுக்கல் மாநகர் மாவட்டத்தலைவர் மணிகண்டன், கிழக்கு மாவட்டத்தலைவர் அப்துல்கனிராஜா, உள்  ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (ந.நி.)

;