மதுரை,டிச.13- இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தோழர், காலப்பெட்டகமாக திகழ்ந்த எழுத்தாளர் என்.ராம கிருஷ்ணன் அவர்கள் ( வயது 81) டிசம்பர் 12 ஞாயிறன்று மதுரையில் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள் இரங்கல் தெரிவித்தனர். சிபிஎம், சிபிஐ தலை வர்கள், தோழர்கள், பல்வேறு கட்சி யினர், அமைப்பினர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தி னர்.
மதுரை தீக்கதிர் அலுவலகத்தில் தோழர் என்.ராமகிருஷ்ணன் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயற் குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், ஏ.லாசர், மதுக்கூர் இராமலிங்கம், தீக்கதிர் முன்னாள் ஆசிரியர் வி.பரமேசுவரன், செம்மலர் துணை ஆசிரியர் தி.வரத ராசன், எழுத்தாளர் அருணன், மாவட்டச் செயலாளர்கள் மா.கணேசன் (மதுரை மாநகர்), கே.ராஜேந்திரன் (மதுரை புற நகர்), ஆர்.சச்சிதானந்தம் (திண்டுக் கல்). செ.முத்துக்கண்ணன் (திருப்பூர்), கோ.நீலமேகம் (தஞ்சாவூர்), டி.வெங்க டேசன் (தேனி), உ.முத்துப்பாண்டியன் (தென்காசி), க.ஸ்ரீராம் (நெல்லை), மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்தி ரன், கே.பாலபாரதி, கே.காமராஜ், கே. சாமுவேல்ராஜ், இரா.விஜயராஜன், கே.ஜி.பாஸ்கரன், எஸ்.கே.பொன்னுத் தாய், எஸ்.பி.ராஜேந்திரன், எஸ்.பாலா, மாணவர் சங்க மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், தூத்துக்குடி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.சீனிவாசன், சிவகங்கை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.கே.தண்டியப்பன், கட்சியின் மதுரை மாநகர், புறநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக் கமிட்டிச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள், தமுஎகச, வாலிபர், மாணவர், மாதர், சிஐடியு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு வர்க்க வெகுஜன அரங்கங்களின் தலைவர்கள், நிர்வாகி கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தலைவர்கள் இரங்கல்
தோழர் என்.ராமகிருஷ்ணன் மறைவு செய்தியறிந்து தமிழகம் முழுவ திலுமிருந்து மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் வர்க்க வெகுஜன அமைப்புகளின் தலை வர்களும், எண்ணற்ற தோழர்களும் தொலைபேசி வாயிலாக இரங்கல் தெரி வித்தனர். சிபிஐ முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு, சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன், சிபிஎம் மத்தி யக்குழு உறுப்பினர்கள் ஏ.கே.பத்ம நாபன், டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தர ராசன், உ.வாசுகி, பி.சம்பத், மூத்த தலை வர் வே.மீனாட்சிசுந்தரம், மதுரை நாடா ளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் பல்வேறு மாவட்டச் செயலாளர்கள், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
தீக்கதிர் ஊழியர்கள் அஞ்சலி
மறைந்த தோழர் என்.ராம கிருஷ்ணன் உடலுக்கு தீக்கதிர் பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன், செய்தி ஆசிரியர் ப.முருகன், விளம்பர மேலா ளர் ஆர்.உமாபதி, அச்சக மேலாளர் க.பாண்டியராஜன், தீக்கதிர் கோயம் புத்தூர் பதிப்பு விளம்பர மேலாளர் அழ கப்பன் மற்றும் அனைத்து ஊழியர் களும் அவரது உடலுக்கு மாலை அணி வித்து செவ்வணக்கம் செலுத்தினர். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், திமுக சார்பில் ஜெய ராஜ், சேகர் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முருகன், மதிமுக சார்பில் மகபூப் ஜான், பார்வர்டுபிளாக் சார்பில் சிவபாண்டியன் ஆகியோர் என்.ராமகிருஷ்ணன் உடலுக்கு மாலை யணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இரங்கல் கூட்டம்
தீக்கதிர் அலுவலக வளாகத்தில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.இதில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்திப் பேசினர்.