districts

img

வாலிபர் சங்க பயணக்குழுவினருக்கு இளையான்குடியில் உற்சாக வரவேற்பு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா தலைமையிலான சைக்கிள் பிரச்சார பயணக் குழுவிற்கு விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டம் அரசூரில் வட்டச் செயலாளர் ரஞ்சித் தலைமையில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், எஸ்.கீதா, ஆர்.மூர்த்தி, சே.அறிவழகன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ், வட்டச் செயலாளர் கே.சிவக்குமார், நிர்வாகிகள் மணிகண்டன், தீர்த்தமலை, மூத்த தலைவர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.