districts

img

குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

தூததுக்குடி , செப். 9 தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு  நீக்க மாத்திரை வழங்கும் முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் குழந்தை கள் மற்றும் பெண்கள் அதிக ளவு ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு நோயால் பாதிக்கப்படுகி றார்கள். இதற்கு குடற்புழு தொற்று ஒரு காரணமாக உள்ளது. எனவே அதனை தடுக்கும் பொருட்டு ஆண்டு க்கு இருமுறை குடற்புழு நீக்கம் திட்டம் செயல் படுத்தப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில்  வெள்ளிக்கிழமை குடற்புழு  நீக்க மாத்திரை (அல்பெண்ட சோல்) வழங்கப்பட்டது.  இதையொட்டி தூத்துக் குடி டுவிபுரம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ ஆகி யோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவி களுக்கு மாத்திரைகளை வழங்கி முகாமை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி இன்ஜினியர் சுரேஷ் ஜார்ஜ் பொன் னையா, மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளர் ஸ்டான்லி, திமுக வட்ட செயலாளர் ரவிந்திரன் மற்றும் பொதுச் சுகாதார அலுவலர்கள், பணியாளர் கள் கலந்து கொண்டனர்.  தூத்துக்குடியில் உள்ள அனைத்து பள்ளி மாணவ மாணவியருக்கும் குடற்புழு  நீக்க மாத்திரைகள் வழங் கப்பட்டது.

;