districts

img

வைகை ஆற்றுநீரை நாட்டார் கால்வாயில் திறந்துவிட்டு 25 கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்க!

சிவகங்கை,அக்.20- மானாமதுரை அருகே உள்ள நாட்டார் கால்வாயில்  வைகை  ஆற்றில் வரும் தண்ணீரை திறந்து விட்டு 25 கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டுசெல்ல வேண்டும் என்று 25 கண்மாய்களின் கிராம மக்கள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தி னர் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை அருகே வைகை ஆற்றில் கிருங்காகோட்டையில் இருந்து ராஜகம்பீரம், வளநாடு, கிளங்காட்டூர், அன்னவாசல் உள் ளிட்ட 25கண்மாய்கள் பயன்பெறும் வகையில்  திமு.க. ஆட்சியில் ரூ.4 கோடி செலவில் நாட்டார் கால்வாய் திட்டம் செயல் படுத்தப்பட்டது.இதில் 25 கிராம கண்மாய்கள் மூலம் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. இந்நிலையில் கால்வாயின் முகத்துவாரம் பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி கருவேல மரங்கள், நாணல்கள் வளர்ந்து புதர் மண்டிக் க்கிடப்பதால் தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. கடந்த வருடம் ரூ.20 லட்சம் செலவில் கால்வாய் தூர்வாரப்பட்டது.மேலும் தீத்தான் பேட்டை அருகே கிளங்காட்டூர் பகுதி மற்றும் அன்னவாசல் பகுதி கிராமங்களுக்கு தண்ணீர் செல்லும் வகையில் ரூ.1 கோடி செலவில் சம ரணை கட்டப்பட்டுள்ளது. தற்போது  வைகையில் 7ஆயிரம் கன அடிக் கும் மேல் தண்ணீர் செல்வதால் மானாமதுரை பகுதியில் உள்ள வைகை வரத்து கால்வாய்கள் அனைத்திலும் தண்ணீர் சென்று கண்மாய்கள் மறுகால் பாய்ந்து வருகின்றன. ஆனால் நாட்டார்

கால்வாயில் மட்டும் பொதுப்பணித் துறையினர் தண்ணீர் திறந்து விடாமல் உள்ள னர்.இதனால்  25- க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து குடிதண்ணீர் மற்றும் கால்நடைகளுக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.  இப்பகுதி அரிமண்டபம் விவசா யியான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மானாமதுரை ஒன்றியத் தலைவர் பரமாத்மா, ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் கூறுகையில், வைகை ஆற்றில் தொடர்ந்து ஒருமாத கால மாக தண்ணீர் சென்றுகொண்டி ருக்கிறது. ஆனால் நாட்டார் கால் வாய் கண்மாய்கள் வறண்டுக் கிடக்கிறது. ஐந்தாயிரம் ஏக்கர் தரி சாக கிடக்கிறது.மாவட்ட நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டார் கால்வாய் மூல மாக  ராஜகம்பீரம், மேலமேல் குடி,கிளங்காட்டூர் எ.நெடுங் குளம்,அன்னவாசல், அரிமண்ட பம், மானாங்காத்தான், புலிக்குளம், கட்டிக்கனேந்தல்,புத்தூர், கள்ளிக்குடி,எம்.கரிசல்குளம்,வாகைக்குளம்,பாப்பான்கண்மாய் ஆகிய கண்மாய்கள் உள்பட 25 கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. கண்மாய்களில் நீர் நிரப்ப மாவட்ட ஆட்சித் ஆட்சித் தலைவர், பொ துப்பணித்துறை உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

;