சிவகங்கை, ஆக.16- சிவகங்கையில் 77 ஆவது சுதந்திர தினவிழா வில் மாவட்ட ஆட்சித்தலை வர் ஆஷா அஜித் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் 22 பயனாளி களுக்கு 1.67 கோடி மதிப்பி லான நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணி புரிந்த 70 காவல்துறையைச் சார்ந்த காவலர்களுக்கும், அரசின் பல்வேறுத்துறை களில் சிறப்பாக பணிபுரிந்த 285 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நற் சான்றிதழ்கள் மற்றும் கேட யங்களையும் மாவட்ட ஆட் சித்தலைவர் வழங்கினார். சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த் தேசிய கொடியேற்றினார். கீழப்பூங்குடியில் ஊராட்சி தலைவி சண்முகவள்ளி, காஞ்சிரங்காலில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து மற்றும் சிபிஎம் அலுவல கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி ஆகி யோர் தேசியக்கொடியை ஏற்றினர். மன்னர் மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி ஆசிரியர் எல். சோமசுந்தரம் தேசியக்கொடியேற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 60 மாண வர்களுக்கு பள்ளி முகமை குழு தலைவர் மேதகு ராணி சாஹிபா பதக்கங்களையும் சான்றிதழையும் வழங்கி னார். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழரசிரவிக்குமார் எம்எல்ஏ, தேசியக் கொடி யேற்றினார். மானாமதுரை ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் லதாஅண்ணாத் துரை கொடியேற்றினார். காரைக்குடி நகராட்சி அலு வலகத்தில் நகர்மன்ற தலை வர் முத்துதுரை, தேவ கோட்டை நகராட்சியில் நகர் மன்ற தலைவர் சுந்தர லிங்கம் மற்றும் இளையான் குடி பேரூராட்சி சேர்மன் நஷ்முதீன், பூவந்தி ஊராட்சி யில் ஊராட்சி மன்ற தலைவி விஜயாஆறுமுகம் தேசிய கொடியேற்றினர்.