districts

மதுரை முக்கிய செய்திகள்

சிபிஎம் மூத்த தோழர்  கே.பிச்சை காலமானார் 

மதுரை, ஆக.6- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர்  மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியக்குழு  முடுவார்பட்டி  கிராமத்தைச் சேர்ந்த கட்சியின் மூத்த தோழர் கே.பிச்சை  (வயது 73)  வெள்ளிக்கிழமையன்று மாலை காலமா னார்.  40 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி உறுப்பினராக இருந்த தோழர் கே.பிச்சை, அலங்காநல்லூர் ஒன்றியக் குழு உறுப்பினராகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் ஒன்றிய குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர். கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்த வர். அன்னாரது மறைவு செய்தி அறிந்து கட்சியின் புற நகர் மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், மூத்த தலை வர் சி.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பா.ரவி, வி.உமாமகேஸ்வரன், ஒன்றியச் செயலா ளர் எஸ்.ஆண்டிச்சாமி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் உட்பட கட்சித் தோழர்கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி சனிக்கிழமையன்று மாலை நடைபெற்றது.

நத்தம் அருகே 2 பேர்  கொலை

நத்தம், ஆக.6-  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடி யை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் தங்கராஜா  (41).டி.வி மெக்கானிக். அதே பகுதியை சேர்ந்தவர்  உதயகுமார் (37). இவர்கள் இருவரும் சனிக்கிழமை யன்று ஊரின் அருகே பேசிக்கொண்டிருந்தனர். அப்  போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த உதயகுமார் தான் வைத்திருந்த அரிவாளால் தங்கராஜாவை தாக்கினார். இதில் இரத்த  வெள்ளத்தில் துடிதுடித்த தங்கராஜா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதை பார்த்த கிராம மக்கள் உதய குமாரை பிடித்து தாக்கினர். இதில் அவர் பலத்த காய மடைந்து நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலன் விசாரணை நடத்  தினர். மேலும் இந்த இரு சம்பவம் குறித்து நத்தம் காவல் ஆய்வாளர்  தங்கமுனியசாமி வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார். இறந்து போன உதயகுமார் மீது  நத்தம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்  ளன. தங்கராஜாவுக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர்.

தேனி அருகே மின்சாரம் தாக்கி  கட்டுமான தொழிலாளி பலி 

தேனி, ஆக.6- தேனி அருகே கட்டுமான பணியின் போது மின்சாரம்  தாக்கி கட்டுமான தொழிலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே வடபுதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அம்மாபட்டி காலனியை சேர்ந்தவர் ஜக்கன் மகன் வீரன்  (27).இவர் தேனி அருகே கோடாங்கிபட்டியில் உள்ள திருச்செந்தூர்  வஉசி தெருவில் குடியிருக்கும் சந்தன ராஜா என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் கம்பி கட்டும் வேலை செய்து கொண்டிருந்தார் .அப்போது எதிர்பாரா விதமாக கம்பியை மேலே தூக்கும் போது அதிக மின்  அழுத்தம் உள்ள மின் கம்பி மீது உரசி மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். இந்த விபத்து குறித்து வீரன் மனைவி பிரேமா கொடுத்த புகாரின் பேரில் பழனிசெட்டிபட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் லதா வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார். 

தேனி மாவட்டத்தில் கஞ்சா கடத்திய 5 பேர் கைது 

தேனி, ஆக.6- கம்பத்தில் கஞ்சா கடத்திய 3 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 1.100 கிலோ கஞ்சா வை பறிமுதல் செய்தனர். உத்தமபாளையம் மதுவிலக்கு போலீசார் கம்பம்மெட்டு சாலையில் ரோந்து சென்றனர். அப்போது  பைபாஸ் ரோட்டில் வந்த பைக்கை நிறுத்தி சோதனை யிட்ட போது அதில் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. போலீசார் இது தொடர்பாக தங்கபாண்டி, பிரவீன், ஆனந்  தன் ஆகிய 3 பேரையும் கைது செய்து அவர்களிடமி ருந்து 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதே போல தேனி அருகே வடபுதுப்பட்டி காலனி சுடு காடு பகுதியில் அதே பகுதியை சேர்ந்த காளிராஜ் மகன்  சந்திரன் (19) என்பவரிடமிருந்து 50 கிராம்  கஞ்சாவை கைப்பற்றி கைது செய்தனர் . பெரியகுளம் தென்கரை அம்பேத்கர் நகரில் உள்ள ஆதி திராவிடர் சுடுகாடு பகுதியில் ரோந்து சென்ற காவல்  துறையினர் அதே பகுதியை சேர்ந்த அழகு ராஜாவை  கைது செய்து 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த னர்.

சூறைக்காற்றால் இராமநாதபுரத்தில் முடங்கிய மீன்பிடித் தொழில் 

இராமநாதபுரம், ஆக.6- மன்னார் வளைகுடா மற்றும் பாக்நீரிணை பகுதி யில் 50 கிலோ வேகத்தில் சூறைக் காற்று வீசுவதால் 5 வது நாளாக இராமநாதபுரம் மாவட்ட மீனவாகள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை தடை விதித்தது. இதனால் ரூ.20  கோடி மதிப்பிலான இறால் மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்  ளது.  இராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீர்ணை பகுதியில்  சூறைக்காற்று வீசுவ தால் கடல் சீற்றத்துடன் கானப்படுகிறது. இதனால் மீன வர்களின் பாதுகாப்பு கருதி இராமேசுவரம், பாம்பன், மண்டபம்,கீழக்கரை,ஏர்வாடி,தொண்டி மற்றும் மாவட்டம் முழுவதிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல  தடை விதிக்கப்பட்டது. சனிக்கிழமை 5 வது நாளாக  தொடருவதால் மீன்பிடி தொழில் முடங்கி விசைப்படகு கள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.  மேலும்  மீனவர்கள் மற்றும் சார்பு தொழிலாளர்கள் என  50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 5 நாட்கள் மீன்பிடிக்க செல்ல முடியாததால் 20 கோடி மதிப்பிலான இறால் மீன் ஏற்றுமதி பாதிக்  கப்பட்டுள்ளதாக மீனவ சங்க நிர்வாகிகள் தெரிவித்த னர். 

மனநலம் பாதித்த மகளைக் கொன்ற  பெற்றோருக்கு ஆயுள் தண்டனை

திருவில்லிபுத்தூர், ஆக.6-  விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகர் வாழக்  குளம் தெருவில் வசிப்பவர் முனீஸ்வரன் (வயது 42).  தனியார் கம்பெனி மேலாள ராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரேவதி (வயது 38). இவர்  கல்லூரி பேராசிரியர் ஆவார் . இவர்களுக்கு மன அள விலும் உடல் அளவிலும் பாதிக்கப்பட்ட ஒன்பது வயது  பெண் குழந்தை ஒன்று இருந்  தது. இந்த குழந்தைக்கு முனீஸ்வரன் ரேவதியும் பல  இடங்களில் மருத்துவம்  பார்த்தும் குணமடைய வில்லை இதனால் கணவன், மனைவி இருவரும் தனது  குழந்தையை 1.10.2018  அன்று திருவில்லிபுத்தூரிலி ருந்து ஒரு ஆட்டோவில் அந்த பெண் குழந்தையை ஏற்றுக் கொண்டு நாக பாளையத்தில் உள்ள காத் தப்பசாமி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு  அந்த குழந்தையின் வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்ய வேண்டும் என்ற நோக்  கில் இந்த செயலில் ஈடுபட் டுள்ளனர். உயிருக்கு ஆபத்  தான நிலையில் இந்த குழந்  தையை மதுரை அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக உயி ரிழந்தது. இதுகுறித்து நாக பாளையம் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்  பேரில் மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, முனீஸ்வரன், அவரது மனைவி ரேவதி இரு வரையும் கைது செய்தனர். திருல்லிபுத்தூரில் உள்ள  மகளிர் விரைவு நீதிமன்றத்  தில் வழக்கு தொடரப்பட்டது.  நீதிபதி பகவதி அம்மாள் வழக் கினை விசாரித்து முனீஸ்வர னுக்கும் அவரது மனைவி ரேவதிக்கும் ஆயுள் தண் டனை விதித்தும் தலா ரூ. 3500 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்  கில் அரசு தரப்பில் மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறி ஞர் எஸ் ஜான்ஸி ஆஜரானார்.

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை  ஊழியர் சங்க இராமநாதபுரம் மாநாடு 

இராமநாதபுரம், ஆக.6- ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்  தின் (சிஐடியு) இராமநாதபுரம் மாவட்ட மாநாடு சங்கத்  தலைவர் எஸ்.ஏ.சந்தானம் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு கொடியை மூத்த தலைவர் சேதுராமன் ஏற்றி  வைத்தார். சண்முகம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.  எஸ்.பிரான்சிஸ் வரவேற்றுப் பேசினார். மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு மாவட்ட செயலா ளர் எம்.சிவாஜி பேசினார்.  வேலை அறிக்கையை  சங்கத்  தின் மாவட்ட செயலாளர் எம்.அய்யாதுரை, வரவு செலவு அறிக்கையை மகாலிங்கம் ஆகியோர் சமர்ப்பித்தனர்.  லோடுமேன் சங்க மாவட்ட செயலாளர் ஏ.சுடலைக்காசி, கட்டுமான சங்க மாவட்ட தலைவர் ஆர்.வாசுதேவன் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். மாநாட்டில் சங்கத்தின் மாவட்ட தலைவராக எஸ்.பிரான்சிஸ், மாவட்ட செயலாளராக எம்.அய்யாதுரை, மாவட்ட பொருளாளராக மகாலிங்கம் ஆகியோர் தேர்வு  செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து வைத்து  சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ் பாலசுப்பிரமணியன்  பேசினார். ராமலிங்கம் நன்றி கூறினார். ஊராட்சிப் பகுதிகளில் பணியாற்றம் துப்புரவு பணியாளர்கள்,ஓஎச்டி ஆப்ரேட்டர்கள், நகராட்சி டெங்கு  பணியாளர்கள், தூய்மை பணியாளர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.

ரூ.30 கோடி பொது விவசாயக்களத்தை மோசடியாக தனிநபருக்கு செய்த பட்டா மாற்றம் ரத்து செய்யப்படும்

மாவட்ட ஆட்சியர், துணைப்பதிவாளர்  உறுதி  

சிவகங்கை, ஆக.6-  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் விவசாயிகளுக்கான களமாக பயன்பட்டு வருகிற 30 கோடி ரூபாய் மதிப் புள்ள நிலத்தை பட்டாதாரர்களுக்கே தெரி யாமல் மோசடியாக தனிநபர்களுக்கு பட்டா  மாற்றம் செய்தது ரத்து செய்யப்படும்  என்று மாவட்ட ஆட்சியரும்,பத்திரத்துறை துணைப் பதிவாளரும் மனு கொடுத்த வர்களிடம் உறுதிகொடுத்துள்ளனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீர பாண்டி, முத்துராமலிங்க பூபதி, மானா மதுரை ஒன்றியக்குழு உறுப்பினர் முருகா னந்தம், சிஐடியு மாவட்ட தலைவர் வீரையா, கிராம மக்கள் சார்பாக சுப்ரமணியன் ,தங்க சாமி, பிச்சை, கணபதி, கருணாகரன், ராஜேந்  திரன், கணேசன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர்,  பத்திரப்பதிவுத்துறை துணைப் பதிவாளர் ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், மானாமதுரை நகரத்தில்  புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள  ரூ.30 கோடி மதிப்புள்ள நிலம் விவசாயி கள் 7 பேர் பெயரில் களமாக பயன்பட்டு  வருகிறது. இந்த நிலத்திற்கு  ஆவணங் களை பொய்யாக தயாரித்து நிலத்தை வேறு பெயருக்கு பட்டா மாற்றம் செய்தி ருக்கிறார்கள். 100 ஆண்டுகளுக்கு மேலாக  களமாக பயன்படுத்தப்பட்டு  வருகிற ரூ.30  கோடி மதிப்புள்ள  7 நபர்களின் பெயர்களில் உள்ள இந்த சொத்தை வேறு நபர்கள் பெய ருக்கு மாற்றி சட்டவிரோதமாக செயல் படுத்தி இருக்கிறார்கள்.வருவாய்த்துறை, பத்திரப்பதிவுத்துறை கூட்டாக சேரந்து முறைகேடு செய்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.  விரைவில் பட்டாவும் ரத்து செய்யப் படும் பத்திரமும் ரத்து செய்யப்படும் என்று  உறுதி கொடுக்கப்பட்டது. அதற்கான பரிந் துரை கடிதம் மானாமதுரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக துணை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

காமராசர் பல்கலை. தொலைநிலைக்கல்வியில்  பட்டச் சான்றிதழ்களை பெற ஜீ.பே. மூலம் பணவசூல் முறைகேடு 

கடும் நடவடிக்கை எடுக்க பல்கலை. பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தல்

மதுரை, ஆக.6- மதுரை காமராசர் பல்கலைக்கழ கத்தின் தொலைநிலைக் கல்வில் துறையில்,  பட்டச் சான்றிதழ்களை அனுப்பிவைக்க  ஜீ.பே. மூலம் பண  வசூல் செய்துள்ள முறைகேடு  அம்ப லமாகியுள்ளது. இதுகுறித்து துணை வேந்தர் கடுமையான நடவடிக்கை யை எடுக்க வேண்டும் என்று மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பாது காப்பு கூட்டமைப்பு வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் அ.சீநிவாசன், செயலாளர் பேராசிரியர் இரா.முரளி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: பல வருடங்களாக மதுரை காம ராசர் பல்கலைக்கழகத்தின் தொலை  நிலைக் கல்வித்துறை மிகவும் வருந்  தத்தக்க நிலையில் செயல்பட்டு வரு கின்றது. பணம் வாங்கிக்கொண்டு சில பட்டப் படிப்புகளில் முறையாக  சேராத பலரின் பெயர்களை இடை யில் செருகி மதிப்பெண்கள் வழங் கிய முறைகேடு வழக்கு கிடப்பில் கிடக்கின்றது. பல அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் மீதும் பல வருடங்களாகியும் இது  வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்  படவில்லை. பல நூறு மாண வர்கள் தொலை நிலைக் கல்வி மூலம் மதிப்பெண்களையும், பட்டங்களை யும் பெறுவதில் மிகவும் கஷ்டப் படும் நிலை இன்றளவும் நீடிக்கின் றது. பல மாணவர்கள் தொலை தூரக்கல்வி அலுவலகத்தில் கடுமை யாகக் காவல் நிலைய விசாரணை போல நடத்தப்பட்டு வருகின்றனர். தேர்வுத்தாள்கள் பழைய பேப்பர் கடையில் எடைக்குப் போடப்பட் டது வரை எத்தனையோ முறைகேடு கள் நடந்தும் யாரும் தண்டிக்கப் படாதது நிரிவாகத்தின் இயலாமை யைக் காட்டுகின்றது. இந்த நிலை யில் புதிதாக ஆயிரக்கணக்கான ரூபாய்களை நிலுவையில் உள்ள கட்டணமாக கூறி அவற்றைத் தன்னி டம் கொடுத்துவிட்டால் உடனடியாக  பட்டச் சான்றிதழ்களை அனுப்பி வைக்கப்படும் என்று கூறி செல்வம் என்பவர் ஜீ.பே. மூலம் பண வசூல் செய்துள்ள முறைகேடு தற்போது அம்பலமாகியுள்ளது.  இது குறித்து துணைவேந்தர் கடுமையான வெளிப்படையான நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும். அதே சமயம் இது வரை உரிய தொகையைக் கட்டியும் பல  ஆண்டுகளாக தங்களின் மதிப்பெண்  பட்டியலையும், பட்ட சான்றி தழ்களையும் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். இனி வரும் காலத்தில் எளிதாக  மதிப்பெண்களை விரைவாக மாணவர்கள் பெற தகுந்த திட்ட மிட்ட செயல் முறை நடவடிக்கைகள் தேவை.  மாணவர்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள், ஆசிரி யர் அலுவலர் சார்பாக பிரதிநிதிகள் கொண்ட மாணவர் குறை தீர்க்கும் குழுவை அமைக்க வேண்டும். தொலை நிலைக் கல்வி மாண வர்கள் பல ஊர்களிலிருந்து குறை களை இணையம் மூலம் தெரி விப்பவகளுக்கு உடனடி தீர்வையும், நேரில் வருபவர்களை மரியாதை யுடனும் அவர்கள் குறைகளை தீர்க்கும் அக்கறையுடனும் அணுக ஏற்பாடு செய்ய வேண்டும்.   இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
 

;