இராஜபாளையம் மேற்கு சொக்கநாதன்புதூரில் விநாயகர் ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஆறுதல் தெரிவித்தனர். மாவட்ட செயலாளர் கே.அர்ச்சுணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆ.குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.ராமர், எம்.ஜெயபாரத், ஒன்றிய செயலாளர் சந்தனக்குமார், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆறுதல் கூறினர்.