districts

img

திருப்புவனம் பகுதிகளில் 40 நாட்களாக தோட்டம், வயல்களில் தேங்கி நிற்கும் மழைநீரால் விவசாயம் கடும் பாதிப்பு

சிவகங்கை, நவ.16-  சிவகங்கை மாவட்டம் திருப்பு வனம் அருகே பல்வேறு கிராமங்க ளில் 40 நாட்களாக தோட்டம், வயல்  களில் தேங்கிநிற்கும் மழைநீரால்  கரும்பு, வாழை, வெற்றிலை கொடிக்  கால், தென்னை ஆகிய விவசா யங்கள் கடுமையாக பாதிக்கப்பட் டுள்ளன.  திருப்புவனம், வெள்ளைக் கரை, நயினார்பேட்டை, கல்யாந் தூர் ஆகிய பகுதிகளில் கொடிக்கால் வெற்றிலை, கரும்பு விவசாயம்,  தென்னை விவசாயம், வாழை ஆகிய தோட்டக்கலை விவசாயம் கடந்த 40 தினங்களாக தண்ணீ ருக்குள் இருப்பதால் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று நேரில் பார்வையிட்டு கள  ஆய்வுக்கு பின்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் தண்டியப்பன் மாவட்ட ஆட்சி யர், வேளாண்மைத்துறை அதிகாரி களுக்கு தெரிவித்துள்ளார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிவ கங்கை மாவட்டச் செயலாளர் தாண்  டியப்பன் ,ஒன்றிய செயலாளர் அய்  யப்பாண்டி, தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ஜெயராமன் ஆகியோர் திருப்புவனம், நைனார்பேட்டை, வெள்ளைக்கரை, கலியாந்தூர் ஆகிய பகுதிகளில் தோட்டக்கலை பயிர்கள்,விவசாயம் பாதிப் புக்குள்ளான பகுதிகளை பார்வை யிட்டனர்.  இதுகுறித்து கட்சியின் மாவட் டச் செயலாளர் தண்டியப்பன் கூறி யதாவது:

கொடிக்கால் விவசாயம் 30 ஏக்  கர் வரைக்கும் தண்ணீருக்குள் மூழ்கி இருக்கிறது.வெற்றிலை கொடிக்கால் இலை முழுவதும்  புள்ளி,புள்ளியாக உள்ளது. முழு மையாக பாதிப்படைந்துள்ளது.இதே போன்று வாழை விவசா யம் 120 ஏக்கர் வரைக்கும் தண்ணீ ருக்குள் மூழ்கி உள்ளது.தென்னை  விவசாயம் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது.கரும்பும் இதே நிலை தான். விவசாயிகளை நேரில்  சந்தித்து கேட்டோம். விவசாயங் கள் எல்லாம் கடந்த 40 தினங்க ளாக தண்ணீருக்குள் கிடப்பதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்  ளது என்றும் எந்தவொரு அதிகாரி யும் வந்து பார்க்கவில்லை என்றும் மிகுந்த வேதனையுடன் கூறினர். எங்களது பாதிப்பை முதன் முத லாக வந்து கேட்டவர்கள் மார்க் சிஸ்ட் கட்சியினர் மட்டுமே என்றும்  தெரிவித்தனர் .

திருப்புவனம் பெரிய கண்மா யில் மடை பழுதால் தண்ணீர் வெளி யேறி கடுமையான பாதிப்பை ஏற்  படுத்தி இருக்கிறது. வயல்களுக் கள் தேங்கிய தண்ணீரை வெளி யேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயத்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். அவர்களும் அதற்குரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்  துள்ளனர் .நாங்கள் கள ஆய்  வுக்கு சென்ற தகவலை தெரிந்து கொண்டு வேளாண்மை துறை  உதவி இயக்குனர் அப்பகுதிக்கு வருகை தந்து விவரங்களை கேட் டார்கள். உதவி இயக்குனர் வேளா ண்மை துறை சுந்தரமகாலிங்கத்தி டம் தோட்டக்கலைத் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பை தெரிவித் தோம். அவரும் தோட்டக்கலைத் துறை அதிகாரியிடமும் மாவட்ட நிர்வாகத்துக்கும் தெரிவிப்பதாக வும் கூறினார். வருவாய்த்துறை ஆய்வாளரும் கிராம நிர்வாக அலு வலரும் நாங்கள் இருக்கும் பகு திக்கு வருகை தந்து விவரங்களை கேட்டனர். பாதிக்கப்பட்டுள்ள விவ சாயிகளுக்கு கரும்பு விவசாயம் என்றால் ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயி ரம் வழங்க வேண்டும்,ஒரு தென் னைக்கு ரூ.600 வரைக்கும் வழங்க  வேண்டும் ,

வாழை பயிருக்கு ரூ.50 ஆயிரம் வரைக்கும் இழப்பீடு தொகை  வழங்க வேண்டும். கொடிக்கால் விவசாயம் கடுமையான பாதிப் புக்கு உள்ளாகி இருக்கிறது .ஒரு ஏக்கருக்கு கொடிக்கால் வெற்றி லைக்கு ஒரு லட்ச ரூபாய் வரைக்  கும் விவசாயிகளுக்கு வழங்க  வேண்டும். இதன் மூலமாகத் தான் அவர்களை பாதுகாக்க முடி யும். ஒவ்வொரு விவசாயியும் பல லட்சங்கள் செலவு செய்திருக்கி றார்கள். விளைந்து வரும் நேரத்தில் மழை தண்ணீரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து கணக்கெ டுக்க வேண்டும் . இழப்பீடு தொகை வழங்குவதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய முறையில் நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேளாண்மை துறை அதிகாரி களும் உயர் அதிகாரிகளுக்கு பரிந்  துரை செய்து இழப்பீட்டுத் தொகைக்கு ஏற்பாடு செய்வதாகவும் பாதிப்பு  தொடர்பாக கணக்கெடுப்போம் என்றும் வேளாண்மைத் துறை  உதவி இயக்குனர் சுந்தரமகா லிங்கம், தோட்டக்கலைத்துறை அதிகாரி சரண்யா ஆகிய இரு வரும் கூறினர்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.