districts

img

எழுத்தாளர் என். ராமகிருஷ்ணன் குடும்பத்தினருக்கு சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆறுதல்

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் எழுத்தாளருமான தோழர் என். ராமகிருஷ்ணன் டிசம்பர் 12 அன்று காலமானார்.  அன்னாரது மறைவுச் செய்தி யறிந்து இந்திய கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செயலா ளர் இரா. முத்தரசன் டிசம்பர் 14 செவ்வாயன்று மதுரை நரி மேட்டில் உள்ள அவரது இல்லத்தில் என். ராம கிருஷ்ணனின் மகள் சாந்தி, மகன் மணவாளன் (எ) கண்ணன் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சிபிஐ புறநகர் மாவட்டச் செயலா ளர் காளிதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா. நரசிம்மன், மாவட்டக் குழு உறுப்பினர் பி. ராதா, வடக்கு - 1 ஆம் பகுதிகுழுச் செயலாளர் வி.கோட்டைச் சாமி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

;