districts

img

சேதுகால்வாய் திட்டத்தை நிறைவேற்றக்கோரி மாநாடு

சேது கால்வாய் திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்த வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் ஜனவரி 27 வெள்ளியன்று மதுரை பழங்காநத்தம் பகுதியில் திறந்த வெளி மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேராசிரியர் அருணன் உரையாற்றினார் .இதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு, தமிழக அமைச்சர்கள் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி, காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம்  லீக் சார்பில்  நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி,  மதுரை மாநகர துணை மேயர் தி.நாகராஜன், சிபிஎம் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன் மற்றும் சிபிஐ, மதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர் .