districts

img

விருதுநகர் ஆட்சியரகத்தில் சிஐடியு-ஆட்டோ தொழிலாளர் சங்கம் முறையீடு போராட்டம்

விருதுநகர், செப்.6- பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோக்களுக்கு ஆன்-லைன்  மூலம் அதிக அளவில் அபராதம்  விதிக்கப்படுகிறது. மேலும், வட்டா ரப் போக்குவரத்து அலுவலர் வழங்  கியுள்ள எல்லையைத் தாண்டி  ஆட்டோக்களை இயக்கினால் ரூ. 10 ஆயிரம் வரை அபராதத் தொகை விதிக்கப்படுகிறது. இதனால், ஆட்டோ தொழிலாளர்கள் பெரும்  பாதிப்படைந்து வருகின்றனர். இந்  நிலையில், ஆன்-லைன் அபராதத் தொகை மற்றும் எல்லை தாண்டி னால் விதிக்கப்படும் அநியாய அப ராதம் ஆகியவற்றை ரத்து செய்வ தோடு, மாவட்டம் முழுவதும் ஆட்டோக்களை இயக்கிட உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று  வலியுறுத்தி சிஐடியு-ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் முறை யீடு போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வி.மகேந்திரகுமார் தலை மையேற்றார். மாவட்ட பொரு ளாளர் வீரசதானந்தம், தங்கச் செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கி வைத்து சாலைப் போக்குவரத்து தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.திருமலை பேசினார். போராட்  டத்தை ஆதரித்து சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் எம்.சாராள், பி.ராமர்,  சிபிஎம் வடக்கு ஒன்றிய செயலாளர்  ஆர்.முத்துவேலு, நண்பர்கள் ஆட்டோ சங்க தலைவர் மணி கண்டன் ஆகியோர் பேசினர். முடி வில் ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலாளர் பி.என்.தேவா கண்டன உரையாற்றினார். இதையடுத்து, சங்க நிர்வாகி கள் அரசு அதிகாரிகளிடம் மனு அளிக்கச் சென்றனர். ஆனால், அங்கு மனுக்களைப் பெற யாரும் இல்லை. இதனால், ஆட்டோ தொழி லாளர்கள் அனைவரும் சாலை யில் அமர்ந்து தர்ணா போராட்டத் தில் ஈடுபட்டனர். தகலறிந்து விரைந்து வந்த வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் பின்பு, மனுக்க ளைப் பெற்றுக் கொண்டார்.

;