சின்னாளப்பட்டி, ஜூன் 7- திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊரட்சி ஒன்றிய அலுவலக பிடிஓ செயல்பட்டு வந்த விஜய்சந்தி ரிக்கா நிலக்கோட்டை யூனியனுக்கு மாறுதல் செய்யப் பட்டார. நிலக்கோட்டை யூனியன் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பொறுப்பேற்ற அவருக்கு சக ஊழி யர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆத்தூர் யூனியனில் ஆணையாளராக லாரன்ஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி முருகேசன், துணை சேர்மன் ஹேமலதா மணி கண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் தட்சிணாமூர்த்தி, மேலாளர் முருகன் சிவராமன் உட்பட அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். ரெட்டியார் சத்திரத்தில் மலரவன் ஆணையாளராக பொறுப்பேற்றுக்கொண்டார் அவருக்கு ஒன்றிய பெருந்தலைவர் சிவ குருசாமி உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்