districts

img

சிவகாசி பகுதியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ஆய்வு

விருதுநகர், செப்.23-  சிவகாசி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி நேரில் ஆய்வு செய்தார். சிவகாசி ஊராட்சி ஒன்றியம், வடமலாபுரம் ஊராட்சி யில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.65 ஆயிரம் மதிப்பீட்டில் சமுதாய கிணறு அமைக்கப்பட்டு வரும் பணியினையும், தூய்மை பாரத இயக்கம் மூலம் ரூ.1.45 லட்சம் மதிப்பில் கிடை மட்ட உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளதையும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் ரூ.3.75 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டினையும், செங்கமலப்பட்டி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.21 லட்சம் மதிப்பீட்டில் புனர மைக்கப்பட்டுள்ள நூலகத்தினையும், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ.4.96 லட்சம் மதிப்பீட்டில் சத்து ணவுக்கூடம் அமைக்கப்பட்டு வரும் பணியினையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், ரூ.23.57 லட்சம் மதிப்பில் நாரணாபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு வரும் பணிக ளையும், சித்துராஜபுரம் ஊராட்சியில் அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.24.85 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வரும் புதுக்குளம் கண்மாய் பணிக ளையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.  இந்த ஆய்வின்போது சார் ஆட்சியர் (சிவகாசி) பிரித்வி ராஜ், உதவி செயற்பொறியாளர் பாண்டுரங்கன், வட்டா  சியர் லோகனாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், ராமமூர்த்தி  உட்பட பலர் உடனிருந்தனர்.

;