districts

img

அரசு வேலையை பறிக்கும் அரசாணைகளை ரத்து செய்க!

தேனி, பிப்.7- அரசு அலுவலகப் பணிகளை  அவுட் சோர்சிங் மற்றும் ஒப்பந்த  முறையில் விட்டு, அரசு, மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் அரசு வேலையை பறிக்கும் அர சாணை எண் 152,139 ஐ ரத்து செய்ய  வேண்டும். கட்டுமானம், முறை சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியத்தில் நிறுத்தப்பட்டுள்ள பென்சன் மற்றும் பணபலன்களை நிபந்தனையின்றி வழங்க வேண்டும். நீண்ட காலமாக டாஸ்மாக், அங்  கன்வாடி, நுகர்பொருள் வாணிப கழகம், மின்சாரத்துறை, கூட்டுற வுத்துறை ஆகியவற்றில் பணி புரிந்து வரும் ஊழியர்களை நிரந்த ரப்படுத்த வேண்டும். பொதுப் போக்கு  வரத்தை பலப்படுத்தி சுற்றுச் சூழலை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி பிப்ரவரி 7 செவ்வாயன்று இந்திய தொழிற்சங்க மையம் (சிஐ டியு) சார்பில்  தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.  தேனி மாவட்டம், சின்னமனூர் ரவுண்டானா அருகே  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு  மாவட்ட  துணைத் தலைவர் எஸ்.பொம்மை யன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட தலைவர் டி.ஜெயபாண்டி, மாவட்ட பொருளாளர் ஜி.சண்முகம் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள்  சதீஸ்  குமார்,  வி.மோகன் , தேவராஜ், சு. வெண்மணி, நாகலட்சுமி, ஆகி யோர் பேசினர்.சிஐடியு மாநில  துணைத் தலைவர் ஆர்.தெய்வ ராஜ் நிறைவுரையாற்றினார். 

விருதுநகர்

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற போராட்  டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலை வர் எம்.மகாலட்சுமி தலைமை யேற்றார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் பி.என்.தேவா, மாவட்ட நிர்வாகி கள் எம்.அசோகன், ஜி.வேலுச்  சாமி,  ஆர்.பாலசுப்பிரமணியன், எம்.சாராள், பி.ராமர், எம்.திருமலை, சி.வேல்முருகன் பி.எஸ்தர் ராணி, உயிர்காத்தான் ஆகியோர் பேசினர். 

மதுரை

சிஐடியு மதுரை மாநகர், புற நகர் மாவட்டக்குழுக்கள் சார்பில் பழங்காநத்தம் ரவுண்டானா ஜெயம் தியேட்டர் அருகில் ஆர்ப்  பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர்  இரா.லெனின் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் அர விந்தன் துவக்கி வைத்து பேசினார். அரசு போக்குவரத்து மதுரை தொழி  லாளர் சங்க பொதுச் செயலா ளர் ஏ. கனகசுந்தர், புறநகர் மாவட்ட உதவித் தலைவர் பொன், கிருஷ் ணன் ஆகியோர் கோரிக்கைகளை  விளக்கிப் பேசினர். மாநிலப் பொரு ளாளர் மாலதி சிட்டிபாபு சிறப்புரை யாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் ஜே.லூர்து ரூபி, கௌரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட தலைவர் கே.ஆர்.கணே சன் தலைமை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினர் பேராசிரியர் சோ மோகனா, மாநிலத் துணைத் தலைவர் சந்திரன், மாவட்ட செய லாளர் கே.பிரபாகரன் ஆகியோர் பேசினர்.  

சிவகங்கை 

சிவகங்கை அரண்மனை வாச லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு மாவட்ட தலை வர் வீரையா தலைமை வகித்தார்.  மாவட்ட செயலாளர் சேதுராமன்  மற்றும் பல்வேறு சங்க நிர்வாகி கள்  உமாநாத், விஜயகுமார், குமார்,  குமரேசன், போஸ் ஆகியோர் பேசினர்.

இராமேஸ்வரம்

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் பேருந்து நிலை யம் முன்பாக சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.ஏ. சந்தானம் தலை மையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மாவட்ட செயலாளர் எம். சிவாஜி துவக்கி வைத்து பேசினார். மாவட்ட துணைத் தலைவர் ஆர்.  குருவேல். மாவட்ட பொருளாளர் ஆர். முத்து விஜயன், நிர்வாகிகள் எம்.கருணாமூர்த்தி,  என்.பி.  செந்தில், ஏ.சுடலைக்காசி, ராமச்சந்  திரபாபு ஆகியோர் பேசினர்.