districts

img

தீப்பெட்டிக்கான மூலப் பொருட்கள் விலையை கட்டுப்படுத்த கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

சாத்தூர், ஏப்.13- மூலப் பொருட்களின் விலை  உயர்வால் தீப்பெட்டித் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதி களில் தீப்பெட்டி ஆலைகள் மூடப் பட்டுள்ளன. இதனால், தொழிலா ளர்கள் வேலையின்றி தவித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.  எனவே, மூலப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலி யுறுத்தி சிஐடியு-தீப்பெட்டி பட்  டாசு தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத் தூர் வடக்கு ரத வீதியில் நடை பெற்ற போராட்டத்திற்கு மாவட் டத் தலைவர் கே.முருகன் தலை மையேற்றார். சிஐடியு நிர்வாகி கள் ஏ.சீனிவாசன், மனோஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாவட்டச் செயலாளர் எம். மகாலட்சுமி துவக்கி வைத்து பேசி னார். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கே.விஜயகுமார் விளக்கிப் பேசினார். சிஐடியு மாவட்ட செயலாளர் பி.என். தேவா கண்டன உரையாற்றி னார். மேலும் இதில், நகர் செய லாளர் பெத்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.