districts

img

பூதமங்கலம் அருகே கள்ளங்காட்டில் சிப்காட் பணியை விரைவுபடுத்த வேண்டும்

மதுரை, பிப்.23-  மதுரை மாவட்டம் கொட்டாம் பட்டி அருகே வஞ்சிநகரம், பூத மங்கலம், கொடுக்கம்பட்டி ஆகிய 3 ஊராட்சி பகுதிகளில் சுமார் 278 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் அமைக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் சுற்றுவட்டார 18 பட்டி கிராம பகுதிகளைச் சேர்ந்த  பொதுமக்கள் மற்றும் பிரதிநிதிகள் வெள்ளியன்று இங்குள்ள கள் ளங்காடு சிவன் கோவிலில் ஒன்று  கூடி சிப்காட் திட்டத்தை விரை வாக செயல்படுத்த வேண்டும் என  கூறி அடையாள போராட்டம் நடத்தி னர். தொடர்ந்து பூதமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்  கள் சார்பில் அருகே உள்ள  கள்ளங்  காட்டில் சிப்காட் அமைய இருக்கும்  பணி குறித்தும், சிப்காட் பணி யினை விரைவுபடுத்த கோரியும், சிப்காட் அமைக்க ஆதரவு கூட்டம்  செட்டிச்சி அம்மன் கோவிலில் நடை பெற்றது. இதற்கு வழக்கறிஞர் சசிகுமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் என்.பழனிச்சாமி, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மதுரை மாவட்டச்  செயலாளர் எஸ்.பி.இளங்கோ வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மேலூர் தாலுகாச் செயலாளர் ஏ. ராஜேஸ்வரன், ஓய்வு பெற்ற தாசில்  தார் மணி ஆகியோர்  பேசினர். இதில் இவர்கள் பேசுகையில், சிப்காட் அமைவதால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், மேலூர் சுற்றியுள்ள அனைத்து கிராம பகுதிகளும் வளர்ச்சி அடை யும் எனவும் விளக்கி பேசி எடுத்து ரைத்தனர். மேலும் அவர்கள் பேசுகை யில், சிப்காட் இங்கு வருவதால் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவர். இந்த பகுதியில் குறைந்த அளவே விளைச்சல் உள்ளது. இதனால் ஜவுளி கடை கள், ஹோட்டல்கள் ஆகிய இடங்க ளுக்கு பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரித்துள்ளது. அதே  நேரத்தில் ஆண்கள் வீடு தவறா மல் வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிக்கும் நிலைமை தொடர்கி றது. சிப்காட் வந்தால் இங்கேயே  தொழில் அமையும். வேறு இடங்க ளுக்கு செல்ல வேண்டியதில்லை. எனவே இந்த பகுதி மக்கள் சிப்காட் அமைக்கும் திட்டத்திற்கு எந்த தயக்கமுமின்றி முழு ஆதரவு தர வேண்டும் என்றனர். இதில் ஊர் மக்கள் சார்பில் கிராம மரியாதைகாரர்கள் முதல்  கரை அம்பலம் அய்வாலி பாண்டி,  பஞ்சாயத்து பழனிச்சாமி, வெள்ளக்குட்டி அம்பலம், ரேடியோ  ஆறுமுகம், சதீஷ்குமார், வழக்க றிஞர் சொர்ணலதா, பெருமாள் மற்றும் கிராம பொதுமக்கள் பெண்  கள் என பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூட்டத்தில் கீழ்க்  கண்ட 4 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. பூதமங்கலம் கள்ளங்காட்டில் சிப்காட் அமைய உத்தரவிட்டுள்ள தமிழக அரசுக்கு நன்றி தெரிவித் தும், பூதமங்கலம் கள்ளங்காட்டில் அமையுள்ள சிப்காட் பகுதியை ஏற்கனவே அரசு அதிகாரிகள் பல  முறை ஆய்வு செய்து தயார் செய்த  வரைவு திட்டத்தினை எந்தவித மான மாற்றத்திற்கும் உட்படுத்தா மல் துரித நடவடிக்கை மேற் கொள்ள அரசு அதிகாரிகளை வலி யுறுத்தியும், பூதமங்கலம் கள் ளங்காடு சிப்காட் அமையுள்ள பகுதியை சுற்றியுள்ள விவசாயி களின் நீர் பாசன ஆதாரமாக உள்ள  அதிகார கண்மாய் உள்ளிட்ட சுற்று வட்ட கண்மாய் குளங்களில் தொழிற்சாலை கழிவுகள் கலக்காத  வண்ணம் நடவடிக்கை மேற் கொள்ளவும், எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத சிப்காட்டிற்கு எதிரான பொய்யான, கற்பனை யான, கட்டுக் கதைகளை கூறி விஷம பிரச்சாரம் செய்து வரும் சமூக விரோதிகள் மீது அரசு அதி காரிகளை அணுகி சட்ட நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. மார்ச் 3 இல் ஆதரவு ஆர்ப்பாட்டம் மேலும் ஞாயிறன்று நடை பெற்ற கூட்டத்தில் திங்கட்கிழமை (இன்று) 24.2.2023 மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து சிப்காட் அமைய உள்ள பூதமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதி  மக்கள் தங்களது முழு ஆதரவை தருவதாகவும் அதற்கான பணி களை துரிதமாக அரசு மேற் கொள்ள வேண்டும் எனவும் மனு அளிக்க உள்ளனர். மேலும் அரசு கொண்டு வர உள்ள சிப்காட் திட்  டத்திற்கு ஆதரவு தெரிவித்து மார்ச்  3 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாகவும் கூறினர்.