districts

img

சந்திரயான்- 3 வெற்றியை மதுரையில் கொண்டாடிய குழந்தைகள்

மதுரை, ஆக.29- மதுரையில் பார்ச்சூன் பாண்டி யன் ஹோட்டல்- தமிழ்நாடு அறி வியல் இயக்கமும் இணைந்து சந்திரயான் வெற்றியைக் குழந்தை களோடு கொண்டாடினர். சந்திராயன்-3 வெற்றிகரமாகத் தரையிறங்கிய விழா கொண் டாட்டத்தையொட்டி, மதுரை வடக்கு வளையபட்டி ஒன்றியப் பள்ளி, மேலூர் பெண்கள் மேல் நிலைப் பள்ளி, திருமோகூர் அரசு  ஒன்றியப் பள்ளி, மேலக்கால் அரசு  நடுநிலைப் பள்ளி மற்றும் புதுக்  கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளைச் சார்ந்த 300 குழந்தைகள் பங் கேற்றனர் பார்ச்சூன் பாண்டியன் ஹோட்  டலின் முற்றத்தில் வைக்கப்பட்டி ருந்த நான்கு தொலைநோக்கிகள் மூலம் அனைத்துக் குழந்தை களும் தொலைதூர பொருளைப் பார்த்து மகிழ்ந்தனர். பள்ளி மாண வர்களை உற்சாகப்படுத்தும் வகை யில் சந்திரயான்-3 ராக்கெட்டுகளின் மாதிரியும் காட்சிப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் மன்ற  மதுரை மாவட்டத் தலைவர் டாக்டர்  ராஜேஷ், இஸ்ரோவின் மூத்த  விஞ்  ஞானி டாக்டர் என்.சுப்பிரமணி யனை அறிமுகப்படுத்தி, தமிழ் நாடு அறிவியல் மன்றத்தின் செயல் பாடுகளை விளக்கினார். சந்திரயான்-1 குழுவில் பணி யாற்றிய இஸ்ரோவின் ஓய்வுபெற்ற  மூத்த விஞ்ஞானி என்.சிவசுப்பிர மணியன் சந்திரயான்-1 மற்றும் 2 குறித்து ஆற்றிய உற்சாகமான உரை குழந்தைகளை உற்சா கப்படுத்தியது. அவர் அப்துல் கலாம் உடன் பணியாற்றிய தனது  அனுபவத்தைப் பகிர்ந்து கொண் டார். சந்திராயன் திட்டங்களை பவர்  பாயிண்ட் மென்பொருள் மூலமா கக் குழந்தைகளுக்கு விளக்கினார்.

பார்ச்சூன் பாண்டியன் ஹோட் டல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், வாசுதேவன், மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளுடன் சந்திர யான்-3 வெற்றியை ஏன் கொண்டா டுகிறோம் என்பது குறித்து குழந்தை களிடம் கலந்துரையாடினார். அர சுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தை களை ஊக்குவித்து, ஒவ்வொரு வரும் அவரவர் துறையில் ஆர்வ முள்ளவர்களாக மாறி, நாம்  வாழும் சமுதாயத்தின் முன்னேற் றத்துக்குப் பங்களிக்க வேண்டும்‌ என்று குழந்தைகளுக்கு வேண்டு கோள் விடுத்தார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தின் மாநிலத் தலைவர் டாக்டர் தின கரன் இந்த விழாவின் வெற்றிக்கு முழு ஆதரவை வழங்கினார். நிகழ்வை ஏற்பாடுகளைப் பாண்டி யன் ஹோட்டல் நிறுவன அதிகாரி தில்ப், தமிழ்நாடு அறிவியல் இயக்  கம் பாண்டிராஜன், காமேஸ்வரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் ஒருங்கி ணைத்தனர்.

அறிவியல்தளம்  நோக்கிப் பயணிக்க...

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை அடுத்துள்ள குன்றக்குடியில் சந்திராயன்- 3 வெற்றிக்குப் பாடுபட்ட விஞ்ஞானி களுக்குப் பாராட்டுவிழா குன் றக்குடியில் நடைபெற்றது.  கல்வியியல் கல்லூரி முதல்வர்  செலின்அமுதா வரவேற்புரை யாற்றினார்.  குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்துப் பேசு கையில், “ குன்றக்குடி அடி களார் இந்தியாவிலேயே அறி வியல் பரப்புனர் விருது பெற்ற மடாதிபதி. கடைக்கோடி மக்க ளுக்கும் அறிவியலைக் கொண்டு சேர்த்தவர் என்றார். தொடர்ந்து பேசிய பொன்னம் பல அடிகளார், ஆன்மீக தளத்திலி ருந்து அறிவியல் தளத்தில் பய ணிக்க வேண்டும். அறிவியல் தொழில்நுட்பம் கடைக்கோடி மக்க ளுக்கும் கொண்டு சேர்க்க வேண்  டும். கிராமப்புற மக்களின் வறுமை யை விரட்ட அறிவியல் தொழில்நுட்  பங்கள் பயன்பட வேண்டும். சந்திராயன்-3 அறிவியல்  நுட்பத்தின் தொழில்நுட்பத்தின்  பிரம்மாண்டமான வளர்ச்சி எனக் குறிப்பிட்ட அடிகளார், மண்ணில் நடந்து கொண்டிருக்கிற ஏழை மனிதர்களின் வாழ்க்கை வெளிச்  சத்திற்கு அறிவியலும் ஆன்மீகமும்  பயன்பட வேண்டும். என்றார்.  குன்றக்குடி வேளாண் அறி வியல் நிலையத் தலைவர் செந் தூர்குமரன், மக்கள் கல்வி நிலை யத் தலைவர் நாச்சிமுத்து, கல்வி யியல் கல்லூரி நிர்வாக அலுவலர்  ராமநாதன், பள்ளித் தலைமை யாசிரியர் பாலசுப்பிரமணியன் உள்  பட பலர் கலந்து கொண்டனர்.