பண்டிகைக் கால முன் பணம், போனஸ் 25 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். சீருடை நிலுவைத் தொகை வழங்க வேண்டும். ஓட்டுநர் நடத்துநர் மீது நிர்வாகம் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்வதை நிறுத்தவேண்டும். காலை-மாலை நேரத்தில் மகளிர் இலவச பேருந்துகளை கூடுதலாக இயக்க வேண்டும் என வலியுறுத்தி அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் மதுரை எல்லீஸ் நகர் பனிமலை முன்பு கே. குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய சங்க உதவிச் செயலாளர் கே.சுதாகரன், மத்திய சங்க தலைவர் பி. எம்.அழகர்சாமி. கிளைச் செயலாளர் டி.சிவகுமார் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.