districts

img

காளையார்கோவில் அரசு காளீஸ்வரா மில்லை திறக்கக்கோரி முற்றுகை

 சிவகங்கை,அக்.14- சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள அரசு காளீஸ்வரா மில்லில் தொழிலாளர்கள் அனைவருக்கும் முழுச் சம்பளம், தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். ஆலை யை முழுமையாக இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி காளீஸ்வரர் மில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார் பாக அக்டோபர் 14 வெள்ளி யன்று முற்றுகை போராட் டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு சிஐடியு தலைவர் நந்தகுமார், செயலாளர் மகேஸ்வரி, எச்எம்எஸ் தலைவர் திரவி யம், செயலாளர் கருப்பை யா, ஏஐடியுசி தலைவர் சுந்த ரம், செயலாளர் ராஜ் குமார், அம்பேத்கர் தொழி லாளர் சங்கத்தின் தலை வர் தொத்தப்பாண்டி, செயலாளர் மனோஜ்குமார், ஐஎன்டியுசி தலைவர் மணி கண்டன்,செயலாளர் வாசு, அதிமுக தலைவர் நாக லிங்கம், செயலாளர் ராமு ஆகியோர் தலைமையில் ஆலைக்குள் தொழிலா ளர்கள் முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு செயலாளர் மகேஸ்வரி கூறுகையில், மில் நன்கு லாபகரமாக இயங்கி வந்தது. கொரோ னா பாதிப்பு காலத்தில்  மில் மூடப்பட்டது. 400 பெண் தொழிலாளர்கள் உள்பட  650 தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந் தோம்.இதனால்  காரணமாக காளையார்கோவில் வியா பாரம் மந்தமானது. வியாபா ரிகள் பாதிக்கப்பட்டார்கள். மில் தொழிலாளிகள் பெறுகிற மாத ஊதியம் காளையார்கோவில் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருந்தது. மில்லை கடந்த மூன்று வருடங்களாக பூட்டி வைத்துக் கொண்டு தொழி லாளர்களின் வாழ்வாதா ரத்தை பறித்திருப்பது நியாய மானதல்ல என்று தெரி வித்தார்.