districts

img

கணிதமேதை ராமானுஜர் பயின்ற பள்ளியில் பிறந்த நாள் விழா

கும்பகோணம், டிச.23- கணிதமேதை சீனிவாச இரா மானுஜரின் 134 ஆவது பிறந்த நாள் விழா அவர் வாழ்ந்த இல்லம், பயின்ற நகர மேல்நிலைப் பள்ளி, அரசு கலைக் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. விழாவில் மயிலாடுதுறை நாடா ளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், தமிழக அரசு தலைமை கொறடா முனைவர் கோவி.செழியன் ஆகி யோர் இராமானுஜரின் சிலைக்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து அரசு கலைக் கல்லூரியில் கும்ப கோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் இராமானுஜர் பயின்ற கும்பகோணம் நகர மேல்நிலை பள்ளியில் உள்ள இராமானுஜரின் சிலைக்கு தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சு.கல்யாண சுந்தரம், பள்ளிச் செய லர், பள்ளித் தலைமை ஆசிரியர், பழைய மாணவர் சங்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.  

தொடர்ந்து நடைபெற்ற முப்பெரும் விழாவிற்கு செயலர் பி.ஆர்.பி.வேலப்பன் தலைமை வகித்தார். பழைய மாணவர் சங்க செயலர் சிவக்குமார், மோகன் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் முனைவர். வெ. சுகுமாரன் வரவேற்றார்.  தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில மாநாட்டில் பங்கேற்க உள்ள குழந்தை விஞ்ஞானிகளுக்கு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் சு.கல்யாண சுந்தரம் சான்றிதழ், பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.  வழிகாட்டி ஆசிரியர்கள், மதிப் பீட்டாளர்களுக்கு மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் பரிசுகள் வழங்கினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் முனைவர் ஆர். கலைவாணி, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு ஒருங்கிணைப் பாளர்கள் முனைவர் இராம்மனோ கர், இராஜசேகர் மாநில மாநாட்டில் பங்கேற்க உள்ள இளம் விஞ்ஞானி களுக்கு பயிற்சி அளித்தனர்.  ரெட்கிராஸ் சேர்மன் வி.எம்.பாஸ்கரன், செயலர் பிரகாசம் வாழ்த் துரை வழங்கினர். அறிவியல் இயக்க கும்பகோணம் செயலர் செந்தில் குமார் நன்றி கூறினார். 

;