districts

img

அழகப்பா பல்கலை.யில் கலைத்திறன் நிகழ்ச்சி திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி பங்கேற்பு

சிவகங்கை, ஏப்.4-  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல் கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் கலை நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடைபெற்றது.  பல்கலைக்கழக பழனியப்ப செட்டியார் நினைவு கலையரங்கில் நடைபெற்ற விழாவில் துணை வேந்தர் ரவி தலையேற்றுப் பேசுகையில், மாணவர்களின் தனித் திறன்களை வெளிப்படுத்துவதற்கு இதுபோன்ற கலை விழாக்கள் பெரிதும் உதவுகின்றன என்றார்.  பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு துணைவேந்தர் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.  இதில் திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமி சிறப்புரை யாற்றினார்.  அழகப்பா பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு  உறுப்பினர் ராஜா ராம், இளைஞர் நலம்-மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் முனைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  இப்போட்டியில் ஒட்டுமொத்த தர புள்ளிகளை பெற்ற தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லூரி முதலிடமும், புதுவயல் ஸ்ரீவித்யா கலை- அறிவியல் கல்லூரி இரண்டாம்  இடத்தையும் வென்றன.இரு அணிகளுக்கும் வெற்றிக் கோப்பை வழங்கி பாராட்டினர்.  முன்னதாக பல்கலைக்கழக பண்பாட்டு மையத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிவகுமார் வர வேற்றார். ஒருங்கிணைப்பாளர் முனைவர் இலங்கேஸ்வ ரன் நன்றி கூறினார்.