districts

img

வத்திராயிருப்பு அருகே இடிந்து விழும் நிலையில் ஆதி திராவிடர் குடியிருப்புகள்

விருதுநகர், டிச.30- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூரில்  ஆதி திராவிடர் குடியிருப்புகளின் மேற்கூரைகள்  உடைந்து வருகின்றன. இதன் காரணமாக, உயிர் பயத்துடன் பொதுமக்கள்  அதில் வசித்து  வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ளது கோட்டையூர். இங்கு, சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி திரா விடர் குடியிருப்பு கட்டப்பட்டது. இதில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். வீடு கள் கட்டித்தரப்பட்ட நாள் முதல், பராம ரிப்பு செய்யவில்லையென கூறப்படுகிறது. இதனால், அங்கிருந்த 10 வீடுகள் சில ஆண்டுகளுக்கு முன்பே இடிந்து விழுந்து விட்டன. அதில் உள்ள மேலும் 11 வீடு களில் மேற்கூரையின் கான்கிரீட்  பெயர்ந்து கீழே விழுந்து வருகிறது. இதனால், எந்த நேரத்திலும் பெரும் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இரவு தூங்கி கொண்டிருந்த குழந்தைகள் கருப்பசாமி, அகிலா மீது மேற்கூரை இடிந்து விழுந்ததில் காயம டைந்ததாக கூறப்படுகிறது. மேலும், சமீபத்தில் பெய்த தொடர் மழை காரண மாக வீட்டின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. இதனால் ஒவ்வொரு நாள் இரவிலும் உயிர் பயத்து டனும், அச்சத்துடன் குடியிருப்புவாசிகள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.   இக்குடியிருப்புகளை சீரமைக்க வேண்டுமென ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை  புகார் தெரிவித்தும் உரிய  நடவ டிக்கையும் எடுக்கவில்லையென பொது மக்கள் கூறுகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர், கோட்டை யூர் ஆதிதிராவிடர் குடியிருப்பில் பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன் மராமத்து பணிகளை செய்திட உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.