districts

வருமான வரி சோதனை எதிரொலி: சார்பதிவாளர்கள் மீது நடவடிக்கை

சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு முழுவதும் சார்பதி வாளர் அலுவலகங்களில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தகவல் வந்ததையடுத்து வருமான வரித்துறை யின் நுண்ணறிவுப் பிரிவு சோதனை நடத்தியது. இதில் சென்னை அருகே செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சுமார் 2000 கோடி ரூபாய் வரை பண பரிவர்த்தனைகள் நடந்தது மறைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதே போல் திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்திலும் 1000 கோடி ரூபாய் வரை பண பரிவர்த்தனைகள் மறைக்கப்பட்டதை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இரண்டு சார்பதிவாளர் அலுவல கத்திலும் 5 வருடத்தில் பதிவு செய்யப் பட்ட பதிவுகளை ஒவ்வொன்றாக ஆய்வு செய்து கணக்கிடும் பணி நடைபெறுவதால் கணக்கில் காட்டாத  தொகையின் அளவு மேலும் அதிகரிக் கும் எனவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், வருமான வரித் துறையினர் மேற்கொண்ட ஆய்வு குறித்து பத்திரப் பதிவுத்துறை தலை வர் அறிக்கை ஒன்றை வெளி யிட்டிருக்கிறார். அதில், வருமான வரி சட்டம் பிரிவு  285 பிஏ மற்றும் விதி 114 இ- ன்படி  ஒவ்வொரு நிதி ஆண்டு முடிவடைந்த தும் ரூ. 30 லட்சத்திற்கு மேற்பட்ட மதிப்பு கொண்ட விற்பனை ஆவணங் களைப் பொறுத்து விற்பவர், வாங்குப வர், ஆதார் எண், பான் எண், சொத்தின்  தன்மை, சொத்தின் மதிப்பு போன்ற விவரங்கள் பதிவு அலுவலர்களால் வருமான வரித்துறை இணைய தளத் தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்த விவரங்கள் வருடந்தோறும் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவல கத்திலும் அந்தந்த பதிவு அலுவல ரால் வருமான வரித்துறை இணைய தளத்தில் மேலேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூலை 4 அன்று திருச்சி மாவட்டம் உறையூர், திரு வள்ளூர் பதிவு மாவட்டம் செங்குன்றம்  ஆகிய சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றிற்கு வருமான வரித்துறை யினர் நேரில் வந்தனர். இப்போது  தேவையான தகவல்களை சரிபார்க் கவும் உரிய ஒத்துழைப்பு வழங்கப் பட்டது. இந்த இரண்டு அலுவலகங்கள் குறித்து கூடுதல் விவரங்கள் வரு மான வரித்துறையினரால் அந்தந்த  சார்பதிவாளர்களிடம் கோரப்பட் டுள்ளது. இவ்விவரங்கள் விரைவில்  வருமான வரித்துறைக்கு அனுப்பப் படும். மேலும் உரிய காலத்திற்குள் இவ்விவரங்களை மேலேற்றம் செய்யாத இந்த இரண்டு அலுவலகங் களின் சார்பதிவாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சார்பதிவாளர்களும் 61 ஏ விவரங்களை வருமான வரித்துறையின் இணைய தளத்தில் உரிய காலத்திற்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கண்டிப்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.