districts

img

கட்டுமானத் தொழிலாளர் சங்க ஒன்றிய மாநாடு

சின்னாளப்பட்டி, ஜூலை 9- இந்திய கட்டுமானத் தொழிலா ளர் சங்கத்தின் ஆத்தூர்  ஒன்றிய மாநாடு ஆரிய நல்லூரில் நடை பெற்றது ஒன்றிய தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். சென்றாயன் முன்னிலை வகித்தார். வில்லியம் வர வேற்றார். நடராஜன் அஞ்சலி தீர்மா னம் வாசித்தார். சங்கக் கொடியை ஆரோக்கியசாமி ஏற்றி வைத்தார். மாநிலக்குழு உறுப்பினர் தீத்தான் துவக்கவுரையாற்றினார். ஒன்றியச் செயலாளர் கண்ணன்  வேலையறிக்கை சமர்ப்பித்தார். மாநிலச் செயலாளர் ராஜா முகமது சிறப்புரையாற்றினார்.  சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர்ஆர் பால்ராஜ் வாழ்த்துரை வழங்கினார். மாவட்டத் துணைச் செய லாளர் பாலச்சந்திர போஸ் நிறைவு ரையாற்றினார்.   மாநாட்டில் ஒன்றியத்  தலைவராக சென்றாயன், செயலா ளராக கண்ணன், பொருளாளராக சகாய ராணி ஆகியோர் தேர்வு செய்  யப்பட்டனர்.