districts

img

மதுரை மாவட்டத்தில் 26.49 லட்சம் வாக்காளர்கள்

மதுரை, ஜன.5- மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகக் கூட்டரங்கில் ஜனவரி 5  அன்று மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலை வர்  மரு.எஸ்.அனீஷ் சேகர், வாக்கா ளர் சிறப்பு சுருக்கத்திருத்தம் அடிப்  படையில் 2023-ஆம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி  பிரதிநிதிகள் முன்னிலையில் வெளி யிட்டார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், மதுரை மாவட் டத்தில் மொத்தம் 10 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 9.11. 2022-ஆம் நாளன்று வெளியிடப் பட்டது. வரைவு வாக்காளர் பட்டிய லின்படி மொத்த வாக்காளர்கள் 26,35,238 ஆகும். மேலும், இந்தி யத் தேர்தல் ஆணையத்தின் உத்தர வின்படி, 01.01.2023-ஆம் நாளி னைத் தகுதியேற்படுத்தும் நாளா கக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் பணிகள்  மேற்கொள்ளப்பட்டன. இதனடிப்ப டையிலான இறுதி வாக்காளர் பட்டி யல் இன்றைய தினம் அங்கீகரிக்கப்  பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள்  முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலின்படி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 26,49,793 ஆகும். இதில் 13,02,834 ஆண் வாக்  காளர்களும், 13,46,733 பெண் வாக்  காளர்களும், மற்றும் 226 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் சிறப்பு சுருக்கமுறைத் திருத்  தம், 2023-இன்படி சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 38,509 மற்றும் இறப்பு, இடமாற்றம், ஒருமுறைக்கும் மேலான பதிவு கள், ஆகியவற்றின்படி நீக்கம் செய் யப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,954 ஆகும். தற்போது மதுரை  மாவட்டத்தில் மதுரை கிழக்கு சட்ட மன்றத்தொகுதி 3 லட்சத்து  28 ஆயி ரத்து 270 அதிகமான வாக்காளர் கள் கொண்ட சட்டமன்றத் தொகுதி யாகவும், சோழவந்தான் (தனி) சட்ட மன்றத்தொகுதி 2 லட்சத்து 18 ஆயிரத்து 072 குறைவான வாக்கா ளர்கள் கொண்ட சட்டமன்றத் தொகுதியாகவும் உள்ளது என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர்கள் உட்பட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். மேலூர் தொகுதியில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 581 பேர், மதுரை கிழக்குத் தொகுதியில் 3 லட்சத்து  28 ஆயிரத்து 270 பேர், சோழவந் தான் (தனி) தொகுதியில் 2 லட்சத்து 18 ஆயிரத்து 72 பேர் ,மதுரை வடக்குத் தொகுதியில் 2 லட்சத்து  42 ஆயிரத்து 787 பேர், மதுரை  தெற்குத்தொகுதியில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 948 பேர், மதுரை மையம் தொகுதியில் 2 லட்சத்து 28  ஆயிரத்து 442 பேர், மதுரை மேற்குத் தொகுதியில் 3 லட்சத்து 1 ஆயிரத்து 762 பேர், திருப்பரங்குன்றத்தில் 3 லட்சத்து 17 ஆயிரத்து 200  பேர், திருமங்கலத்தில் 2 லட்சத்து  73 ஆயிரத்து 33 பேர், உசிலம்பட்டி யில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 698 பேர்  என மொத்தம் 26 லட்சத்து 49 ஆயி ரத்து 793 வாக்காளர்கள் உள்ள னர்.