தேனி, மே 21- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கல்வியும், சுகாதாரமும் தமிழ்நாடு அரசின் இரு கண்கள் என்பதனை கருத்தில் கொண்டு, ஏழை, எளிய மாணவ, மாணவியர்களின் கல்வித்தரத்தினை மேம்படுத்துக்கின்ற வகையில், எண்ணற்ற கல்வி சார்ந்த திட்டங்களை தீட்டி அதனை செயல்படுத்தி, மாணவ, மாணவியர்களின் கல்வித்தரத் தினை மேம்படுத்தி வருகிறார்கள். நாளைய சமுதாயம் வெறும் ஏட்டுக் கல்வியாக மட்டும் அல்லாமல் பல்திறன் வளர்க்கும் கல்வியாக மேம்படுத்திட வேண் டும் என்பதனை கருத்தில் கொண்டு,முத லமைச்சரின் கனவுத்திட்டமான உலகை வெல்லும் இளைய தமிழகம் - நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற ஆசிரி யர்களை கொண்டு, மாணவ, மாணவி யர்களின் படிப்பு, அறிவு, சிந்தனை, ஆற்றல் திறமை உள்ளிட்டவைகளை மேம்படுத்து வது, தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது,
அடுத்தடுத்து என்ன படிக்கலாம், எங்கு படிக்க லாம், எப்படிப் படிக்கலாம் என வழிகாட்டு தல், தமிழில் தனித்திறன் பெறவும், சிறப்புப் பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரள மாகப்பேசுவதற்கும், நேர்முக தேர்வுக்கு தயாராவது குறித்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவியர்களின் கல்வி தரத்தினை மட்டுமின்றி வாழ்வாதா ரத்தினை மேம்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் 70 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயின்ற 3,485 மாணவர்களும், 3,181 மாணவியர்களும், பனிரெண்டாம் வகுப்பு பயின்ற 2,970 மாணவர்களும், 2,996 மாணவி யர்களும், 27 அரசு உதவி பெறும் மேல் நிலைப்பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயின்ற 2,721 மாணவர்களும், 2,795 மாணவி யர்களும், பனிரெண்டாம் வகுப்பு பயின்ற 2,475 மாணவர்களும், 2,817 மாணவி யர்களும் என மொத்தம் 97 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பதி னொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்ற 11,651 மாணவர்களும், 11,789 மாணவியர்களும் ஆக மொத்தம் 23,440 மாணவ, மாணவியர்கள் பயனடைந்துள்ள னர்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன டைந்த பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட சருத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவர் கோபிதரன் தெரிவிக்கையில், எனது அப்பா விவசாய கூலி வேலை செய்து என்னை அரசு மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்க வைத்தார். முதலமைச்சர் எண்ணற்ற கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி வருவதன் மூலம் பனி ரெண்டாம் வகுப்பு வரை எளிதாக படிக்க முடிந்தது. பனிரெண்டாம் வகுப்பு முடித்த வுடன் என்ன படிக்காலம், எங்கு படிக்காலம் குறித்து, எங்களது பள்ளியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு, எங்களுக்கு தனியாக வகுப்புகள் நடத்தினர்.
இப்பயிற்சி வகுப்பின் மூலம் நான் எனது மேற்படிப்பு படிப்பினை தேர்வு செய்வதற்காக ஏதுவாக அமைந்துள்ளது. தற்போது நான் பனி ரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 546 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். நான் ஜேஇஇ நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று தற்சமயம் தமிழ்நாடு அரசு உதவியுடன் சென்னையில் இலவசப் பயிற்சி பெற்று வருகிறேன். மேலும், அரசு பொறியியல்; கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பித்திட உள்ளேன். எங்களைப் போன்ற ஏழை, எளிய மாணக்கர்களின் நிலையினை கருத் தில் கொண்டு, இதுபோன்ற கல்வி சார்ந்த திட்டங்களை செயல்படுத்தி கல்வித்தரத் தினை மேம்படுத்தி, எங்களது வாழ்வில் ஒளிவிளக்கேற்றி வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ் சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கி றேன் என கூறினார். இத்தகவலை தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.ஜெகவீர பாண்டியன் தெரிவித்துள்ளார்.