மயிலாடுதுறை/பெரம்பலூர், செப்.5 - தமிழக முதலமைச்சர் முக.ஸ்டா லின் திங்கட்கிழமை சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை யின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதி புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப் பில் சேரும் அனைத்து மாணவி களுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1000 அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடி யாக செலுத்தப்படும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை மாவட்டம், செம்ப னார்கோயிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பு பயிலும் 271 மாணவிகளுக்கு தலா ரூ.1000 உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் ஆணை களை சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி யர் லலிதா, சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ராஜகுமார், ஒன்றியக் குழுத் தலைவர் நந்தினி ஸ்ரீதர், காமாட்சி மூர்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் முருக தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்
இத்திட்டத்தின் கீழ் பெரம்பலூரில் முதற்கட்டமாக 446 மாணவிகளுக்கு பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி கூட்ட அரங்கில் போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவ சங்கர் மாவட்ட ஆட்சியர் ப.ஸ்ரீவெங்கட பிரியா முன்னிலையில், திங்களன்று வங்கி கணக்கு அட்டைகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சி.ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட னர்.