districts

img

பெரம்பலூரில் வேலைவாய்ப்பு முகாம் பணி நியமன ஆணை வழங்கல்

பெரம்பலூர், டிச.5 - பெரம்பலூர் மாவட்டத் தில் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார் வேலை  வாய்ப்பு முகாம் நடத்தப் பட்டது.  ஞாயிறன்று ரோவர் பள்ளியில் நடைபெற்ற முகாமில் 126 நிறுவ னங்களில் இருந்து பங்கேற்ற னர். இந்த வேலை வாய்ப்பு  முகாமில் 3000 பேருக்கு மேல்  பல்வேறு நிறுவனங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.  முகாமிற்கு பெரம்ப லூர் மாவட்ட ஆட்சியர் வெங்கடபிரியா தலைமை  வகித்தார். பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவ சங்கர் தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி வாழ்த் தினார். பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.பிரபா கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.