புதுச்சேரி லாஸ்பேட்டை உழவர்சந்தை சந்திப்பிலுள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சரவணன்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளையொட்டி புதுச்சேரியில் அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழவர்கரை நகரக் குழு செயலாளர் ஆர்.எம்.ராம்ஜி தலைமையில் செயற்குழு உறுப்பினர் என்.கொளஞ்சியப்பன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆனந்த், சஞ்சய், நகரக் குழு உறுப்பினர்கள் அரிகிருஷ்ணன், குணசேகரன், ஜெயபிரகாஷ், மாணவர் சங்க மாநிலச் செயலாளர் பிரவீன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.