districts

img

தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாள்

தந்தை பெரியாரின் 144ஆவது பிறந்த நாளையொட்டி புதுச்சேரி பிள்ளை தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்  தலைவர் கொளஞ்சியப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், தமிழ் மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள், மாநிலக் குழு உறுப்பினர்கள் ராமசாமி, ஆனந்த்,சிஐடியு பிரதேச தலைவர் முருகன்  உட்பட திரளானோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


 

;