districts

img

வேங்கைவயல் விசாரணை - நீதிமன்றம் முடிவு

வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய முடிவினை எடுத்துள்ளது.
 புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள ஒரு குறிபிட்ட சமூகத்தினர் வாழும் பகுதியிலுள்ள குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட வழக்கின் விசாரணை முதலில் காவல் துறையினரால் நடத்தப்பட்டு பிறகு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இதுவரையில் குற்றவாளிகள் கைது செய்யப்படாததால் வழக்கினை சிபிஐக்கு மாற்ற வேண்டுமென வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கின் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்துள்ளது