புதுக்கோட்டை, அக்.16 - புதுக்கோட்டை திருக் கோகர்ணம் ஸ்ரீவெங்க டேஸ்வரா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவன் பள்ளிக் கல்வித்துறை நடத்திய நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார். புதுக்கோட்டை திருக் கோகர்ணம் ஸ்ரீவெங்க டேஸ்வரா பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வரும் மாண வர் எம்.தனுஷ்கிருஷ்ணன், பள்ளிக் கல்வித்துறை நடத்திய நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு, மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார். மாநில அளவிலான நீச்சல் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மாணவன் எம். தனுஷ்கிருஷ்ணனை பள்ளி யின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.