districts

img

நாகை தொகுதி சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜூவுக்கு ஆதரவாக ஜி.ராமகிருஷ்ணன் வாக்குச் சேகரிப்பு

நாகப்பட்டினம், ஏப்.8 - நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகு தியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியி டும் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வாக்குச் சேகரித்தார்.  நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு கடைத்தெருவில் இந்தியா கூட்டணி வேட் பாளர் வை. செல்வராஜுவுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன் வாக்குச் சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், மோடி அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுக ளில் அரசியலமைப்பின் பல்வேறு அம் சங்களை சீரழித்து விட்டனர்.இவர்கள் நீடித் தால் அரசியலமைப்புச் சட்டம் என்பது இந்தி யாவில் இனிமேல் இருக்காது. இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநருக்கு உரிய அந்தஸ்தை கேள்விக்குறியாக்கி விட்டார்.  பல்வேறு ரவுடிகளையும், வழிப்பறி கொள்ளையர்களையும் பாஜகவில் இணைத்த பெருமை அண்ணாமலைக்கு உண்டு.

இப்படி மக்கள் மத்தியில் அம்ப லப்பட்டு நிற்கும் பாஜக அரசை வீழ்த்துவது தான் நம் முன் இருக்கும் தலையாய கடமை. நாகை தொகுதியில் இந்தியா கூட்டணியின்  சார்பில் போட்டியிடும் வை.செல்வராஜூவுக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார்.

இந்த தேர்தல் பரப்புரை சுற்றுப் பயணத்தில் சிபிஎம் நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரிமுத்து, திமுக மாவட்டச் செயலாளர் என்.கௌதமன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பி னரும் கீழ்வேளூர்  சட்டமன்ற உறுப்பினரு மான நாகைமாலி, சிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.லதா, சிபிஎம் ஒன்றியச் செய லாளர் ஏ.ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.