districts

img

தேனி தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி உறுதி

தேனி, மார்ச் 24- தேனி தொகுதியில் தங்க தமிழ்ச் செல்வன் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தேனி, பெரியகுளத்தில் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். ‘இந்தியா’ கூட்டணி சார்பில் தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்க.தமிழ்ச்செல்வனை ஆத ரித்து தேனி, பெரியகுளம் ஆகிய இடங்களில் பல்லாயிரக்கணக்கா னோர் திரண்ட பிரச்சார கூட்டம் நடைபெற்றது.  தேனி பங்களா மேடு பகுதி யிலும், அதனைத் தொடர்ந்து பெரியகுளத்திலும் தேர்தல் பிரச்சா ரம் மேற்கொண்டார்.

பெரியகுளம் பேருந்து நிலையம் பிரிவில் பரப் புரை செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் தங்க தமிழ்ச் செல்வனை 3 லட்சம் வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். தங்க தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றால் இங்குள்ள பிரச்ச னைகளை நான் சரி செய்து தரு வேன் எனக் கூறி உதயசூரியன் சின் னத்திற்கு வாக்கு சேகரித்தார்.  தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியில், மாநில உரிமை மட்டுமின்றி கல்வி, நிதி உரிமைகளும் பறி போனது.

மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டிற்கு வெளியே வந்து, கை தட்டுங்கள், விளக்கு வையுங்கள் என பிரதமர் மோடி கூறினார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் தான் முதல் நபராக கொரோ னாவுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றார்’’ என்று சுட்டிக் காட்டினார்.  ‘‘பத்து ஆண்டு கால மோடி ஆட்சியில் சாலை, மருத்துவக் காப்பீடு என அரசு திட்டங்களில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்தி ருப்பதாக மத்திய தணிக்கைக் குழு அறிக்கை அளித்துள்ளது. சிஏஏ சட்டம் கொண்டு வந்த போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்க வில்லை.

தற்போது சிஏஏ நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்த போது, தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த மாட்டோம் எனக் கூறியவர் நமது முதலமைச்சர் ஸ்டாலின். தொடர்ந்து பேசிய அவர், இங்கு இருப்பவர் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடையாது,

ஆர்எஸ்எஸ் ரவி’’ என்றும் உதயநிதி பேசினார். கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ, கம்பம் செல்வேந்திரன், எல்.மூக்கையா, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.சரவணக்குமார், ஆ.மகாராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங் கடேசன், சி.முருகன், டி.கண்ணன், எம்.ராமச்சந்திரன், சி.முனீஸ்வரன், தேனி தாலுகா செயலாளர் இ.தர்மர், பெரியகுளம் தாலுகா செயலாளர் எம்.வி.முருகன் உள்ளிட்ட தோழமை கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.